Apr 09, 2018 06:55 AM

அப்பா வயது நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா!

அப்பா வயது நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த தமன்னா, காதல் விவகாரத்தால் தமிழ்ப் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால், அங்கு அவரது படங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பியவர் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, ’பாகுபலி’ தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்ப்பார்த்த தமன்னாவுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. காரணம், அப்படத்திற்குப் பிறகு தமன்னாவுக்கு பெரிய வார்ப்புகள் ஏதும் வரவில்லை.

 

இந்த நிலையில், தனக்கு அப்பா வயதுள்ள சீனியர் நடிகரான வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

 

அனில் ரவிபுடி, இயக்கும் தெலுங்குப் படத்தில் வெங்கடேஷ், வருண் தேஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகும் இப்படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். அவர் வெங்கடேஷுடன் ஜோடி சேருவது இது தான் முதல் முறையாகும். வருண் தேஜுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாதா நடிக்கிறார்.