Oct 23, 2021 04:01 AM

கேரள லாட்டரியை மையமாக கொண்டு உருவாகும் தமிழ்ப் படம்!

கேரள லாட்டரியை மையமாக கொண்டு உருவாகும் தமிழ்ப் படம்!

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை விதிக்கப்பட்டாலும், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அந்த லாட்டரி சீட்டுகள் தமிழகத்திற்குள்ளும் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

 

இந்த நிலையில், கேரள லாட்டரியை மையமாக கொண்ட தமிழ்த் திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. ‘பம்பர்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ பட புகழ் வெற்றி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு இணையான வேடத்தில் ஹரீஷ் பேரடி நடிக்கிறார்.

 

வேதா பிக்சர்ஸ் சார்பில் சு.தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை எம்.செல்வகுமார் இயக்குகிறார். இவர் இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் முத்தையா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். 

 

கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கார்த்திக் நேத்தா எழுதுகிறார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு செய்ய உள்ளார்.

 

தற்போது படத்தில் உள்ள பிற கதாப்பாத்திரங்களுக்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

 

கேரளா மற்றும் தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.