Dec 07, 2017 07:22 AM

படமாகும் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவரின் பொன்மொழி

படமாகும் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவரின் பொன்மொழி

’வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம்’ என்ற பொன்மொழியை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்தான் ‘வீரத்தேவன்’. இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் கார்த்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும் முதல் படம் இது.

 

நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த மாவட்ட கதைக்களம்..அதற்கேற்ற தமிழ் பேசத் தெரிந்த நாயகி. அந்த வட்டார பழக்க வழங்கங்களை அறிந்தவர் என்பதால் அவரை நாயகியாக அறிமுகப் படுத்தினோம் என்கிறார் இயக்குனர். மற்றும் கராத்தே கோபாலன், வீரன்செல்வராசு, எம்.ஜி.சிவகுமார், மெய்ராஜன், ஜவஹர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவு - மகேஷ்.K.தேவ், இசை - தர்மபிரகாஷ், பாடல்கள்   -  யுகபாரதி, சினேகன், வீரன்செல்வராசு, எடிட்டிங்    -  A.K.நாகராஜ், கலை   -   சுப்பு அழகப்பன், நடனம்   -  அசோக் ராஜா, பாரதி அகர்வால், 

ஸ்டன்ட்    -  ஆக்ஷன் பிரகாஷ், நிர்வாக தயாரிப்பு   -  M.G.சிவகுமார்  

 

G.S.மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கராத்தே கோபாலன் மிக பிரமாண்டமாய்  தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் வீரன்செல்வராசு இயக்குகிறார்.

 

படம் பற்றி கூறிய இயக்குய்நர், “நாகரிகம் என்ற நச்சு இன்று நகரத்திலிருந்து நகர்ந்து கிராமப்புறங்களையும் தாக்கி கொண்டிருகிறது. இந்த கால கட்டத்திலும் உயிர்ப்புடன் இருப்பது குடும்ப உறவுகளை தாங்கி நிற்கிற கிராமப்புறங்கள் தான்.  கிராமப்புற மக்களின் உறவுகள், அதில் உள்ள சிக்கல்கள், ஆசை, அன்பு, கோபம் போன்றவையை காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து உருவாக்கி உள்ளோம். படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை படத்தின் தலைப்புக்கேற்ப ஆக்ஷன் படமாக உருவாக்கி உள்ளோம்.” என்றார்.