Sep 30, 2017 01:04 PM

திரைப்படங்களுக்குக்கான கேளிக்கை வரி - தமிழக அரசு புது உத்தரவு!

திரைப்படங்களுக்குக்கான கேளிக்கை வரி - தமிழக அரசு புது உத்தரவு!

தமிழகத்தில் சினிமா டிக்கெட்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரியுடன், மாநில அரசு 30 சதவீத கேளிக்கை வரியும் விதித்தது. இதனால் டிக்கெட் விலை கடுமையாக விலை உயரும் என்பதால், திரைத்துறையினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதால் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. மேலும், டிக்கெட் உடன் 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி மட்டும் விதிக்கப்பட்டு வந்தது.

 

இந்த நிலையில், ஜி.எஸ்.டி வரியுடன், 10 சதவீத கேளிக்கை வரியை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 30 சதவீத கேளிக்கை வரியில் இருந்து 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

புதிய படங்களுக்கு 10 சதவீதமும் மற்ற திரைப்படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட படங்களுக்கு 7 சதவீத கேளிக்கை வரியும், மற்ற மொழி திரைப்படங்களுக்கு 14 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டுள்ளது.