Apr 08, 2025 10:00 AM

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!

‘புஷ்பா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

அல்லு  அர்ஜுனின் 22 வது படமாகவும், இயக்குநர் அட்லியின் 6 வது திரைப்படமாகவும் உருவாக உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படம் உலக படைப்பாக பான் வேர்ல்டு திரைப்படமாக உருவாக உள்ளது.

 

இன்று இப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள படக்குழு இப்படத்திற்கு தற்காலிகமான தலைப்பாக '#AA22xA6' என்று வைத்துள்ளது. இப்படத்தில், நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

 

Sun Pictures

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளது. 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லியின் #AA22xA6 வது படமாக  உருவாகும் இந்த புதிய படம் இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல்,  சர்வதேச அளவிலான திரைத்துறையில் புதிய சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.