உலகை நெருங்கும் அபாயம்! - எச்சரிக்க வரும் ‘தி புக் ஆஃப் ஏனோக்’
படத்தின் தலைப்பு மட்டும் அல்ல, படத்தின் கருவே ஹாலிவுட் சினிமாக்களுக்கு நிகரான ஒன்றாக உருவாகும் தமிழ்ப் பாட்டம் தான் ‘தி புக் ஆஃப் ஏனோக்’ (The Book of Enoch)
'ஹாண்ட் ஆப் காட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ராபின் சாமுவேல் தயாரிப்பில், வெயிலோன் இயக்கும் இப்படம், 100 வருடங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் நடந்த ஒரு மோசமான சம்பவம், தற்போது மீண்டும் நடந்தால் என்னவாகும், என்பது குறித்து பேசுகிறது.
கொரோனா காலத்தில் மக்கள் மேற்கொண்ட, மாஸ்க் அணிந்து கொள்வது, சமூக இடைவெளி, நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொள்வது போன்றவை இன்று மட்டும் நடக்கும் விஷயமல்ல. இன்றிலிருந்து சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் மனித சமூகம் இதே போன்று ஒரு நோய் தொற்றை சந்தித்தது. 'இன்ப்ளுயன்சா வைரஸ்' (Influenza Virus) கொத்துக்கொத்தாக மனிதர்களை அழித்தது. இதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகி மக்கள் இடையே மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டு மிகவும் மோசமான கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடை பெற்றது. ஒரு வேளை அதே போன்ற மன நிலை இன்று மக்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பது தான் - 'தி புக் ஆஃப் ஏனோக்' (The Book of Enoch) படத்தின் கதை.
விஜய் விஷ்வா கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய, பீரவீன் எஸ்.ஏ இசையமைக்கிறார்.
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா! என்று பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஹாலிவுட் தரத்தில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.