Feb 07, 2018 01:20 PM

விஜயின் வெற்றி ரகசியத்தை சொல்லும் புத்தகம்!

விஜயின் வெற்றி ரகசியத்தை சொல்லும் புத்தகம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார். சினிமா தவிர்த்து அரசியலிலும் ஈடுபாடு காட்டி வரும் அவர், சினிமாவில் வெற்றி பெற்ற ரகசியம் குறித்து சொல்லும் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

‘விஜய் ஜெயித்த கதை’ என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியான இந்த புத்தகத்தை, எழுத்தாளர் சபீதா ஜோசப் என்பவர் எழுதியிருக்கிறார்.

 

இந்த நிலையில், ‘நாளை நமதே’ என்ற தலைப்பில் நெல்லையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், தமிழகத்தில் சரித்திரம் படைத்த தலவிஅர்களின் புத்தகத்திற்கு மத்தியில் விஜயின் திரையுலகப் பயணம் பற்றிய ‘விஜய் ஜெயித்த கதை’ புத்தகமும் வைக்கபப்ட்டிருந்தது.

 

இந்த புத்தகத்தில் நடிகர் விஜயின் 25 ஆண்டுகால திரையுலக பயணமான 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படம் முதல், சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மெர்சல்’ படம் வரையிலான தகவல்களும், அவர் கடந்து வந்த வெற்றி பயணம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.