நானி நடிக்கும் 'ஹிட் -3' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் சைலேஷ் கொலானு - வால்போஸ்டர் சினிமா + யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும் 'ஹிட் : மூன்றாவது வழக்கு' ( HIT : 3rd Case) எனும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது.
'நேச்சுரல் ஸ்டார்' நானி தனது 32 வது படமான ஹிட் : மூன்றாவது வழக்கு ( HIT : 3rd Case) எனும் திரைப்படத்தில் சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். யுனானிமஸ் புரொடக்ஷன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது. இந்த திரைப்படத்தில் ஹிட் அதிகாரியாக நடிக்கும் நானியின் அபாயகரமான கதாபாத்திரத்தை பற்றி ஒரு கண்ணோட்டத்தை வழங்கும் பிரத்யேக காணொளி மூலம் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியானது.
இதற்கிடையில் தொடர்ச்சியாக பிளாக் பஸ்டர் வெற்றிகளுடன் பயணித்து வரும் நடிகர் நானி, ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் . ஹிட் 2 படத்தின் இறுதியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளபடி ஹிட் அதிகாரியான அர்ஜுன் சர்க்கார் - ஹிட் ( HIT) அதிகாரியாக அவர் நடிப்பார். மேலும் ஹன்டர்ஸ் கமாண்ட் ஆஃப் ஹிட் தேர்ட் கேஸ் (Hunter's Command. of HIT : 3rd Case எனும் இந்த படத்தில் அவர் மேலும் ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவரது இந்த தோற்றம் பாராட்டை பெற்றிருக்கிறது. மேலும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
இந்த படத்திற்காக நானி தன் புதிய வடிவிலான உடல் தோற்றத்திற்கு மாற்றம் பெற்றுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்திருக்கிறார்கள். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக ஸ்ரீ நாகேந்திர தாங்கலா பணியாற்றுகிறார்.
HIT-3 அடுத்த ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.