Dec 10, 2024 09:35 AM

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வெளியானது!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வெளியானது!

’சித்தா’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் எழுதி இயக்கும் படத்தில், விக்ரம் நாயகனாக நடிக்கிறார். ‘வீர தீர சூரன் - பாகம் 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக சி.எஸ்.பாலசந்தர் பணியாற்றுகிறார். ஆக்‌ஷன் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி 14 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள டீசரும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்தின் மீது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம்  2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.