Oct 18, 2023 06:07 AM

’லியோ’ பட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!

’லியோ’ பட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் சிறப்பு காட்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு திமுக் அரசு தான் காரணம், என்று அதிமுக தலைவர்கள் பலர் குற்றம் சாட்டி வந்தனர்.

 

இந்த நிலையில், ‘லியோ’ தொடர்பான அனைத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்வு நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. ஆம், நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘லியோ’ திரைப்படத்தை பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு அதிகாலை 3 மணியளவில் படம் பற்றிய தன் கருத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்ட உதயநிதி, ”தளபதி விஜய் அண்ணாவின் லியோ சிறப்பு.லோகேஷ் கனகராஜின் இயக்கம் மிகச்சிறப்பு.அனிருத்தின் இசை அன்பறிவின் சண்டைப்பயிற்சி ஆகியன அருமை.லோகேஷ்கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் இனிமை.படத்தைத் தயாரித்திருக்கும் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோவுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.

 

உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவால் ‘லியோ’ படக்குழு உற்சாகமடைந்துள்ளனர். காரணம், திரைக்கு வரும் முன்பே பார்க்கும் படங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே உதயநிதி பதிவிடுவார்.நன்றாக இல்லையென்றால் சத்தமின்றிக் கடந்து போய்விடுவார். இப்போது அவர் இவ்வளவு பாராட்டியிருப்பது படத்துக்குப் பெரும் பலம் என்று உற்சாகமாகச் சொல்கின்றனர்.

 

மேலும், ‘லியோ’ படத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாக சொல்லப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமகவும் அவருடைய பதிவு அமைந்திருப்பதால், திமுக-வுக்கு எதிராக பரப்பப்பட்டு வந்த கருத்துகளும் பொய்யாகிவிட்டது.

 

நாளை காலை ஏழுமணிக்குத் திரையிடலாமா? கூடாதா? என்பது குறித்த முடிவை தமிழ்நாடு அரசு இன்று மதியத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் அதிகாலை 3 மணியளவில் ‘லியோ’ படத்தை பாராட்டி பதிவு வெளியிட்டிருக்கிறார் என்றால் நிச்சயம் சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழக அரசு வழங்கும் என்பது உறுதியாகி விட்டது.