Jan 03, 2018 01:35 PM

பிரச்சினை இல்லாமல் தணிக்கை சான்றிதழ் பெற்ற உதயநிதி படம்!

பிரச்சினை இல்லாமல் தணிக்கை சான்றிதழ் பெற்ற உதயநிதி படம்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் வலம் வருகிறார். திமுக ஆட்சியில் இருந்த போது இவர் படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் கிடைத்து வந்த நிலையில், திமுக ஆட்சியை இழந்து அதிமுக ஆட்சியை பிடித்தவுடன், உதயநிதியின் தயாரிப்பிலும், நடிப்பிலும் வெளியான படங்கள் ரொம்பவே சிரமத்தை சந்தித்துத்தது.

 

யு சான்றிதழ் பெறுவதற்கான அத்தனை தகுதிகள் இருந்தாலும், அது உதயநிதியின் படம் என்பதால், அப்படங்கள் யு சான்றிதழ் பெறாமல் தவித்தது. இதை தொடர்ந்து நீதிமன்றத்தின் மூலம் சில படங்களுக்கு உதயநிதி யு சான்றிதழ் பெற்று வந்தாலும், அவரது படங்கள் தொடர்ந்து தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் சிக்கல்களை சந்தித்து வந்தது.

 

இந்த நிலையில், பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் ‘நிமிர்’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே, எந்தவித பிரச்சினையும் இன்றி உதயநிதியின் படம் யு சான்றிதழ் பெற்றது என்றால் அது ‘நிமிர்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நமீதா பிரமோத், பார்வதி நாயர், இயக்குநர் மகேந்திரன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை சந்தோஷ் டி.குருவில்லா தயாரிக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இயக்குநர் சமுத்திரக்கனி வசனம் எழுத ஐயப்பன் நாயர் எம்.எஸ் படத்தொகுப்பு செய்கிறார். தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைக்கிறார்கள். 

 

எந்த ஒரு படத்திற்கும் தகுந்த  சென்சார் சான்றிதழ் என்பது மிக முக்கியமான அங்கீகாரம் ஆகும். உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'நிமிர்' படத்திற்கு 'யு' சான்றிதழ் தரப்பட்டுள்ளது. குடும்பங்களோடு ரசித்து கொண்டாடக்கூடிய படங்களை தருவதற்கு  பெயர் போன பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிமிர்' படத்தை சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ளார். 'நிமிர்' படம் அவரது சிறப்பான சினிமா வாழ்க்கையில் மற்றுமொரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.