Jun 11, 2024 03:12 PM
உமாபதி ராமையா - ஐஸ்வர்யா அர்ஜூன் திருமணம் - பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் நேற்று (10 ஜூன்) கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் இனிதே நடைபெற்றது.
திருமண நிகழ்வில் நடிகர்கள் விஷால், கார்த்தி, துருவா சர்ஜா, ஜெகபதி பாபு, சமுத்திரகனி, விஜய குமார், செந்தில், நாஞ்சில் சம்பத், சாண்டி மாஸ்டர், தயாரிப்பாளர்கள் ஜி.கே.ரெட்டி, எஸ்.ஆர்.பிரபு, கே.இ.ஞானவேல்ராஜா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.