Aug 19, 2021 09:13 AM

வன்னியர்களை ஏமாற்றிய இயக்குநர் மோகன்! - வழக்கு தொடர முடிவு?

வன்னியர்களை ஏமாற்றிய இயக்குநர் மோகன்! - வழக்கு தொடர முடிவு?

கிரவுட் பண்டிங் என்று சொல்லப்படும் பொதுமக்களின் நிதி உதவியோடு தயாரிக்கப்பட்ட படமான ‘திரெளபதி’ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. சுமார் ரூ.40 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரூ.10 கோடி வரை வருவாய் ஈட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

 

இதற்கிடையே, வன்னியர்களுக்கு ஆதரவாக படம் எடுக்கிறேன், என்று கூறிக்கொண்டு அவர்களிடம் பல உதவிகளை பெற்ற இயக்குநர் மோகன், திரைப்படம் வெளியாகி லாபம் ஈட்டியதை மறைத்து, நஷ்ட்ட கணக்கு காட்டி வருவதாகவும், அதனால் வன்னியர்கள் அவர் மீது கடும்கோபத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், வன்னிய சமூகத்தை சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் பலர், இலவசமாக படத்தை ரிலீஸ் செய்ததோடு, வீடு வீடாக சென்று ‘திரெளபதி’ படத்தின் டிக்கெட்களை விநியோகம் செய்தார்களாம். இதுபோல் வன்னியர்கள் செய்த பல உதவிகளை பெற்றுக்கொண்ட இயக்குநர் மோகன், படத்தை சரியாக எடுக்காததோடு, படம் தொடர்பான வியாபரத்திலும் சில மோசடியை செய்திருப்பதாக குற்றம் சாட்டும் வன்னிய சமூகத்தினர், இயக்குநர் மோகன் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதோடு, அவருடைய புதிய படமான ‘ருத்ரதாண்டவம்’ படத்தை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.a