Dec 18, 2023 07:11 AM
வசந்த் ரவி நடிப்பில் உருவாகும் ‘இந்திரா’ முதல் பார்வை போஸ்டர் வெளியானது

நயன்தாரா நடிப்பில் வெளியான ’ஐரா’, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற ’நவரசா’ போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, இயக்கும் முதல் படத்திற்கு ‘இந்திரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் நாயகனாக வசந்த் ரவி நடிக்க, ந் ஆயகியாக மெஹ்ரின் பிரசண்டா நடிக்கிறார். இவர்களுடன் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.