Jan 06, 2025 03:36 AM

கோலாகலமாக நடைபெற்ற வேலம்மாள் பள்ளியின் 12 வது ‘வீதி விருது விழா 2025’!

கோலாகலமாக நடைபெற்ற வேலம்மாள் பள்ளியின் 12 வது ‘வீதி விருது விழா 2025’!

வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருது விழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சென்னை, முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் கோலாகலமாக நடைபெற்றது

 

இந்தக் கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும்  உயிர்ப்பிக்கவும், ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது.

 

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வருகை தந்து தங்கள் கலைத்திறன்களை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். 

 

இந்தக் கலைத் திருவிழா, சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்ம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், கர்னல். பேராசிரியர் (டாக்டர்) என். எஸ். சந்தோஷ் குமார், வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தின் தாளாளர் திருமிகு. எம். வீ. எம். வேல்மோகன்

மாற்று ஊடக மையத்தின் நிறுவனர் பேராசிரியர் (டாக்டர்) ஆர். காளீஷ்வரன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு. நாசர், ஆகிய சான்றோர் பெருமக்களின் பங்கேற்பும் விழாவை மேலும் சிறப்பிக்கச் செய்தது.

 

விழாவின் முக்கிய பகுதியாக, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவங்களான தெருக்கூத்து, கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறை இசை, ஒயிலாட்டம் போன்ற பல கலை நிகழ்வுகள் பார்வையாளர்களின் மனங்களை மிகவும் கவர்ந்தது. இந்தக் கலைகள் வண்ணமயமான ஆடைகளால், இனிமையான இசையால், அற்புதமான நடன அசைவுகளால் உயிர்ப்பூண்டன.

 

இந்த விழா, நாட்டுப்புறக் கலைகளின் அழகையும் அரிய பாரம்பரியத்தையும் பாதுகாக்கவும், கலைஞர்கள் புத்துணர்ச்சி பெறவும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது. திறமையான கலைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அங்கீகாரம் பெறவும் முக்கிய தளமாகவும் இக்கலைவிழா செயல்பட்டது.

 

மேலும், விழாவின் ஓர் அங்கமாகத் தங்கள் திரைப்படங்கள் வழியாக மக்களிடம் தமிழகப் பாராம்பரியக் கலைகள் பற்றிய விழிப்புணர்வைச் சிறப்பாகக் காட்சிப் படுத்திய திரை ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

 

விருது பெற்ற திரை ஆளுமைகள்:

 

திரு. வெற்றிமாறன் - விடுதலை பாகம் 2

 

திரு. மாரி செல்வராஜ் – வாழை

 

திரு. பா. ரஞ்சித் - தங்கலான் 

 

திரு. சீனு ராமசாமி - கோழிப்பண்ணை செல்லத்துரை 

 

திரு. பிரேம்குமார் - மெய்யழகன் 

 

திரு. பி. எஸ். வினோத் ராஜ் – கொட்டுக்காளி

 

திரு. டி. ஜே. ஞானவேல் - வேட்டையன் 

 

திரு. தமிழரசன் பச்சமுத்து – லப்பர் பந்து

 

திரு. போஸ் வெங்கட் - சார் 

 

திரு. பரி இளவழகன் – ஜமா

 

திருமதி. திவ்யாபாரதி – ஜில்லு

 

திரு. மைக்கேல் கே. ராஜா – போகுமிடம் வெகு தூரமில்லை

 

திரு. எழில் பெரியவேடே – பராரி

 

திரு. நந்தா பெரியசாமி - திரு.மாணிக்கம்

 

திரு. இரா. சரவணன் – நந்தன்

 

விழா அமைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இந்த விழா ஒரு கலைகளின் வெற்றித் திருவிழாவாக அமைந்திருந்தது.