விஜய், அஜித் கதை கேட்க முன்வரவில்லை - இயக்குநர் சுசீந்திரன்!
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் கதை கேட்க முன்வருவதில்லை, என்று பல வெற்றிப் படங்கள் கொடுத்த முன்னணி இயக்குன்நர்களில் ஒருவரான இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
‘வெண்ணிலா கபடி குழு’ என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன், ‘நான் மகான் அல்ல’, ‘ஜீவா’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டியநாடு’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். ஒரே மாதிரியாக அல்லாமல் தனது ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான கதைக்களத்தோடு இயக்கி தொடர் வெற்றிக் கொடுத்து வரும் சுசீந்திரனின், இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.
‘நெஞ்சில் துணிவிருந்தா’ தீபாவளிக்கு வெளியாக இருந்தது. ஆனால், போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால், நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் தேதி தள்ளிப்போய் உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சுசீந்திரனிடம், விஷால், கார்த்தி போன்ற ஹீரோக்களை தாண்டி மற்ற இயக்குநர்களை இயக்காதது ஏன்? என்று கேட்டதற்கு, “முன்னணி இயக்குநர்கள் கதை கேட்க முன்வருவதில்லை. சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அது வருக்கு பிடிக்காமல் போய்விட்டது. அது அவரது தனிப்பட்ட விஷயம். விஜய் சாரிடம் கதை சொல்ல அப்பாயின்மெண்ட் கேட்டேன், இன்னும் கிடைக்கவில்லை. அதேபோல் அஜித் சாரிடமும் கதை சொல்ல அப்பாயின்மெண்ட் கேட்டு, இதுவரை கிடைக்கவில்லை.” என்று பதில் அளித்தார்.
2 ம் பாகம் எடுத்தால், உங்களது படத்தில் இருந்து எதை எடுப்பீர்கள்? என்றதற்கு, ”முதல் பாகத்தில் இருக்கும் அர்பணிப்பு, 2ம் பாகத்தில் இருப்பதில்லை. ஒரு சில படங்கள் தான் 2ம் பாகமும் வெற்றியடைந்துள்ளன. அப்படியே எடுத்தால் நான் ‘பாண்டிய நாடு’ படத்தை தான் எடுக்க விரும்புவேன்.” என்றவர், சினிமா குறித்து தெரியாதவர்கள் எல்லாம் சென்சார் போர்டில் இருப்பது வேதனை அளிக்கிறது. பிரேமுக்குள் ஏதேனும் புகை தென்பட்டால் அ-த பிரேமை நீக்க சொல்லுகின்றனர். அது சுண்டல் விற்கும் வண்டியில் இருந்து வருகிறது, என்று சொன்னால் கூட ஏற்க மறுக்கின்றனர், என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
‘நெஞ்சில் துணிவிருந்த’ படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கி வரும் ‘ஏஞ்சலினா’ பெண்களை மையப்படுத்திய படமாகும். இப்படத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.