Jun 26, 2024 05:33 AM

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். சரத்குமார் மற்றும் சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன், ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, டி.லலிதா, பி.பிரதீப், பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளர் ராயின் இசையில்  “தீரா மழை...” மற்றும் இசையமைப்பாளர் ஹரி டாஃபுசியாவின் இசையில் “தேடியே போறேன்...” ஆகிய இரண்டு பாடல்களும் இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

 

விரைவில் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. விஜய் ஆண்டனி படம் என்றாலே தனித்துவமான கதைக்களம், விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த திரைக்கதையோடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதோடு, இதுவரை விஜய் ஆண்டனி படத்தில் பார்த்திராத ஆக்‌ஷன் காட்சிகள் இப்படத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.