Feb 03, 2018 03:16 AM

ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கிய விஜய்!

ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கிய விஜய்!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து அதிரடி காண்பித்துவிட்டார். மேலும், தனது கட்சிக்காக மாவட்டம் வாரியாக உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த், ஒவ்வொரு மாவட்டத்திற்கான பொறுப்பாளர்களை நியமித்து அவர்களது பெயர்களையும் வெளியிட்டு வருகிறார்.

 

ரஜினிகாந்தைப் போல நடிகர் விஜய்க்கும் அரசியல் மீது ஆர்வம் இருந்த நிலையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவரது படங்கள் ரிலிஸின் போது தொடர்ந்து சந்தித்த சிக்கலால், தனது அரசியல் ஆசைக்கு ஓய்வு அளித்திருந்தார்.

 

தற்போது, ரஜினிகாந்த் அரசியலில் நுழைய உள்ள நிலையில், விஜயும் அரசியலில் ஈடுபடுவதற்காக முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

தனது படங்களில் அரசியல் வசனங்களை பேசி சர்ச்சையை உருவாக்கி வரும் விஜய், தனது மக்கள் இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் VMI என்ற ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அத்துடன் www.vijaymakkaliyakkam.in என்ற இணையதளம் மூலமாகவும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

ரஜினிகாந்த் தனது மன்றத்திற்கு உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் சேர்ப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், விஜயும் தனது மன்றத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால், அவரும் விரைவில் நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்றும், ரஜினிகாந்துக்கு அவர் போட்டியாக இருப்பார், என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.