Mar 19, 2018 05:16 AM

தென்னிந்தியா அளவில் விஜய்க்கு கிடைத்த புதிய பெருமை!

தென்னிந்தியா அளவில் விஜய்க்கு கிடைத்த புதிய பெருமை!

’மெர்சல்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். அப்படத்தினால் ஏற்பட்ட சர்ச்சை தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதற்கிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்காக விரைவில் விஜய் கொல்கத்தா செல்ல உள்ளார்.

 

இந்த நிலையில், தென்னிந்தியாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு கிடைத்திருக்கிறது. தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகர்கள் என்றால் ரஜினியும், சிரஞ்சீவியும் இருந்த நிலையில், தற்போது அவர்களை விஜய் பின்னுக்கு தள்ளி முன்னிலைப் பெற்றுள்ளார்.

 

தென்னிந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த டீசராக மெர்சல் வந்துள்ளது, இதுவரை இந்த டீசரை சுமார் 38 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். கபாலி தான் இதற்கு முன் இந்த சாதனையை நிகழ்த்தியது, மேலும் பாகுபலி ட்ரைலர் இதைவிட அதிகம் என்றாலும், அதன் மார்க்கெட் வேறு.

 

எனவே, ஒரு நடிகராக பெரிய ஹிட்ஸ் கொடுத்திருப்பது விஜய் தான் என்பதால், தற்போதைய தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸ் நம்பர் ஒன் நடிகர் என்றால் அது விஜய் தானாம்.