தமிழகத்தின் முதல்வர் விஜய் தான்! - போஸ்டரால் எழுந்த சர்ச்சை
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் விஜய் சினிமாவை கடந்து அரசியலிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். அதற்கு ஏற்றவாறு அவரது ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதோடு, தமிழகத்தில் நடைபெறும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்கள். விஜயும் ‘ஜல்லிக்கட்டு’ உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் நேரடியாக பங்கெடுத்தும் வருகிறார்.
இந்த நிலையில், தென்னை சென்னை மாவட்ட, தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், புத்தாண்டையொட்டி போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார்கள். அதில், ”CM of Tamilnadu” என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது ”தமிழகத்தின் முதலமைச்சர்” என்பதற்காக ஆங்கில வார்த்தையை தான் இது.
ஏற்கனவே திரைப்பட விழாவில் நடிகர் விஜய் ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக பேசியதால் பெரிய சர்ச்சை வெடித்த நிலையில், தற்போது அவரது ரசிகர்கள் விஜயை முதலமைச்சராக சித்தரித்திருப்பது தமிழக அரசியலில் சலசலப்பும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், அந்த போஸ்டரில், ”CM of Tamilnadu” என்ற வார்த்தையில் உள்ள CM என்பதற்கான அர்த்தம் Collection Master என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கு ‘மாஸ்டர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.