வீட்டை விற்ற விஜய் பட தயாரிப்பாளர்!
தேசிய அளவில் ‘மெர்சல்’ படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்துள்ள நிலையில், படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றொரு விஷயத்திற்காக கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க-வின் எதிர்ப்பு எதிரொலியாக, தேவைப்பட்டால் படத்தில் இருந்து காட்சிகளை நீக்க தயாராக இருக்கிறோம், என்று ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் சார்பில் நேற்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.
தற்போது, படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்கினால் படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்களோ!, என்ற அச்சமும் தயாரிப்பு தரப்பிடம் இருக்கிறதாம்.
இந்த நிலையில், ‘மெர்சல்’ படத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை தாண்டி, கூடுதலாக 50 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால், படம் இரண்டு வாரத்தில் ரூ.100 கோடி வசூல் செய்தால் தான் போட்ட பணத்தையே திரும்ப எடுக்க முடியும் என்ற சூழல் உள்ளதாம். அதே சமயம், கியூபுக்கு பணம் செலுத்துவதற்காக தயாரிப்பாளர் தனது வீட்டை விற்று பணம் கட்டியுள்ளாராம்.
கையில் இருந்த பணம், கடன் வாங்கிய பணம் என்று அனைத்தையும் கொட்டி படத்தை முடித்துவிட்டாலும், தியேட்டரில் திரையிடுவதற்கு பணம் இல்லாமல், தனது வீட்டை தயாரிப்பாளர் விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படம் தற்போது வெற்றிகரமாக ஓடினாலும், தயாரிப்பாளர் இன்னும் அபாயக்கட்டத்தில் தான் இருக்கிறாராம். அதற்குள்ளாக பா.ஜ.க-வின் பிரச்சினை வந்ததால், தனது பணம் திரும்ப வருமோ வராதோ! என்ற அச்சமடைந்துள்ளவர், தனது தந்தை மிருகங்களை நம்பி படம் தயாரித்து பணம் சம்பாதித்தார். ஆனால், நான் மனிதர்களை நம்பி இப்படி மோசம் போய் விட்டேன், என்று தனது நெருங்கியவர்களிடம் புலம்பவும் செய்வதாகவும் கூறப்படுகிறது.