Nov 03, 2020 07:27 AM

விஜய் 65 படத்தின் புதிய இயக்குநர் இவர் தான் - ஆச்சரியத்தில் கோலிவுட்

விஜய் 65 படத்தின் புதிய இயக்குநர் இவர் தான் - ஆச்சரியத்தில் கோலிவுட்

விஜயின் 64 வது படமான ‘மாஸ்டர்’ கொரோனா பாதிப்பால் ரிலீஸாகமல் இருக்கிறது. தற்போது திரையரங்கங்கள் திறக்க அரசு அனுமதி அளித்திருப்பதால் தீபாவளியன்று படம் வெளியாகும், என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், தீபாவளிக்கு ‘மாஸ்டர்’ படம் ரிலீஸ் இல்லை என்றும், பொங்கலுக்கு வெளியாகுமா என்பதை தற்போது கூற முடியாது, என்று படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

 

இதற்கிடையே, விஜயின் 65 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸுக்கும் விஜய்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அப்படத்தில் இருந்து முருகதாஸ் விலகிவிட்டார். இதனால், விஜயின் 65 வது படத்திற்கு புதிய இயக்குநர் தேர்வு நடைபெற்றது.

 

இதில், பல்வேறு இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சனை விஜய் தேர்வு செய்துள்ளாராம். சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கி வரும் நெல்சன், ஏற்கனவே விஜய்க்கு ஒரு கதை கூறியிருந்தாராம். விஜய்க்கும் அந்த கதை பிடித்திருந்ததால், தற்போது நெல்சனையே தனது 65 வது படத்தின் இயக்குநராக விஜய் தேர்வு செய்து விட்டாராம்.

 

Director Nelson

 

ஆனால், விஜயின் முதல் தேர்வு இயக்குநர் மகிழ்திருமேணியாக தான் இருந்ததாம். அவர் சொன்ன கதை தான் விஜய்க்கு ரொம்ப பிடித்திருந்ததாம். அந்த கதையை 66 வது படமாக வைத்துக் கொண்டாராம். தற்போது முருகதாஸ் விலகியதால், மகிழ்திருமேணியே தனது 65 வது படத்தை இயக்கட்டும், என்று விஜய் விரும்பி அவரை அழைத்தாராம். ஆனால், உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்க மகிழ்திருமேணி ஒப்பந்தம் செய்திருந்ததால், அவரால் விஜய் படத்தை இயக்க முடியவில்லையாம்.

 

இதனால் தான், விஜையின் 65 வது படத்தின் வாய்ப்பு இயக்குநர் நெல்சனுக்கு கிடைத்ததால் கோலிவுட் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.