நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ முதல் பார்வை போஸ்டர்!
நடனக் கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி பிறகு நடிகரான மன்சூர் அலிகான், தனது தனித்துவமான நடிப்பு மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகரானவர், நாயகன் அவதாரம் எடுத்து பல வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார். வில்லன், நாயகன் என்று கலக்கியவர் தற்போது பல படங்களில் காமெடி வேடங்களிலும், காமெடி கலந்த வில்லத்தனத்திலும் கலக்கிக்கொண்டிருப்பவர், அவ்வபோது சமூக அக்கறையுடன் கூடிய கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து, நாயகனாக நடித்து வருகிறார்.
அந்த வகையில், தமிழ்நாட்டையும், தமிழகத்தின் தாய்மார்களையும் பாடாய்ப்படுத்தும் மதுவை மையமாக வைத்து ஒரு புரட்சிக்கரமான படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வரும் மன்சூர் அலிகான், அப்படத்திற்கு ‘சரக்கு’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
இப்படம் பற்றிய தகவல் மற்றும் தலைப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிடப் போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்த நிலையில், அறிவித்தது போல் இன்று மாலை நடிகர் விஜய் சேதுபதி ‘சரக்கு’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்.
நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தில் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் மன்சூரலிகானுடன் ‘சரக்கு’ படத்தின் நாயகி, இயக்குநர் ஜெயக்குமார்.ஜே, தில்ரூபா அலிகான், ஜஹாங்கிர் அலிகான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
‘சரக்கு’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி, படத்தின் தலைப்பை போல் படமும் ரசிகர்களை நிச்சயம் ஈர்க்கும் என்ற நம்பிக்க இருப்பதாக தெரிவித்ததோடு, முதல் பார்வை போஸ்டரும் கவனம் பெறும் வகையில் இருப்பதாக படக்குழுவினரை பாராட்டினார்.
இப்படத்தின் மன்சூர் அலிகானுக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்க, சிறப்பு தோற்றத்தில் நாஞ்சில் சம்பத் நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவிமரியா, லொள்ளு சபா மனோகர், மூஸா, மதுமிதா, வினோதினி, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் தயாரிக்கும் இப்படத்தை ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைக்கிறார். எழிச்சூர் அரவிந்தன் திரைக்கதை, வசனம் எழுதும் இப்படத்திற்கு எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்கிறார். சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, கோவிந்தராஜ் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
மன்சூரலிகானுக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் #விஜய்சேதுபதி
— CinemaInbox (@CinemaInbox) April 12, 2023
மன்சூரலிகானின் #சரக்கு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி#Sarakku Movie Tell Good Msg for People!
@mansoor_alikhan_offl @VijaySethuOffl
@jeyakumar6299 @sidvipin@vincentarul @maheshthiyagu@redin_kingsley… pic.twitter.com/yMtwTU0BYv