Sep 14, 2017 12:35 PM

நிதியுதவி தொடர்பாக மாணவியை விஜய் மன்றத்தினர் ஏமாற்றினார்களா? - விஜய் தரப்பு விளக்கம்

நிதியுதவி தொடர்பாக மாணவியை விஜய் மன்றத்தினர் ஏமாற்றினார்களா? - விஜய் தரப்பு விளக்கம்

அரியலூர் மாணவி ரங்கீலாவுக்கு நிதி உதவி தருவதாக கூறி விஜய் ரசிகர் மன்றத்தினர் ஏமாற்றி விட்டதாகவும், அதனால் அவரது படிப்பு பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

 

இது தொடர்பாக மாணவி ரங்கீலா பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், “விஜய் பிறந்தநாளின் போது சென்னைக்கு அழைத்து சென்று விஜயிடம் இருந்து சான்றிதழ் பெறுவது போல் எல்லாம் புகைப்படம் எடுத்தனர். ஆனால் சொன்னது போல கல்வி நிதியுதவி அளிக்காததால் படிப்பு பாழாகிப் போய்விட்டதாக, தெரிவித்திருந்தார். 

 

இது தொடர்பாக விளக்கம் அளித்த விஜய் தரப்பு, “ரங்கீலாவுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தவர்கள் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர். இதை அறியாத அவர், அவர்களின் வாக்குறுதியை நம்பி ஏமாந்து போய்விட்டார்.

 

உண்மை நிலை இப்படி இருக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜய் ரசிகர்கள் ஏமாற்றி விட்டதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. நாங்கள் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றியதாக திரித்து செய்திகள் பரப்பப்படுகின்றன.

 

மாணவ சமுதாயத்தின் மீது விஜயும் அவரது ரசிகர்களும் எந்த அளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பதை நாடு நன்கு அறியும். மாணவி ரங்கலாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் கல்வியைத் தொடர நிதிஉதவி வழங்கத் தயாராக உள்ளோம். அந்த நிதியை பெற்று மாணவி தனது கல்வியைத் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.