Jun 29, 2022 05:24 PM

ஜூலை 8 ஆம் தேதி ஒடிடி-யில் வெளியாகும் ‘விக்ரம்’

ஜூலை 8 ஆம் தேதி ஒடிடி-யில் வெளியாகும் ‘விக்ரம்’

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ தமிழ் சினிமாவின் அதிகம் லாபம் கொடுத்த திரைப்படங்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்திருப்பதோடு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பிற மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று தற்போதும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

 

திரைத்துறையின் உச்சபட்ச ஆக்‌ஷன் த்ரில்லர்", "ஆண்டவரின் வெற்றி மேஜிக்", "தென்னிந்தியாவின் பவர் ஹவுஸ் திறமைகளின் நடிப்பு கண்காட்சி", "ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் திரைப்படம்’ இன்னும் இன்னும் பல பாராட்டுக்கள்!!! கமல்ஹாசனின் திரை வாழ்வில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றிப்படமான 'விக்ரம்' படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும் மற்றும் விமர்சகர்களின் பாரட்டுக்களும் நிற்காமல் இன்னும் கனமழை போல, பொழிந்து கொண்டு இருக்கிறது. இந்திய அளவில் அனைத்து திரைச் சாதனைகளையும் உடைத்துள்ள, இந்த திரைப்படம் இந்திய வர்த்தக வட்டாரங்களை மட்டும் ஆச்சரியப்படுத்தவில்லை, சர்வதேச சந்தைகளையும் பிரமிக்க வைத்துள்ளது.

 

விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து 100% நேர்மறையான விமர்சனங்களுடன் இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஓபனிங்கை பெற்றது. வெளியான வேகத்தில் திரையரங்குகள் திருவிழா கோலமாக மாறியது, வெளியான மூன்று-நான்கு வாரங்களுக்குப் பிறகும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இப்படம் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது. ‘விக்ரம்’  இந்திய திரையுலகின் பல பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் சாதனைகளை முறியடித்துள்ளது, மேலும் தமிழ்நாட்டின் டாப் வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது, இது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகளால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

விக்ரம் திருவிழாவை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தான் முதன்முதலில் தொடங்கி வைத்தது  என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்ட்-கோர் ஆக்சன் திரைப்பட ஆர்வலர்கள் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படத்தை புகழ்பெற்ற டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் திரையரங்குகளில் 'விக்ரம்' என்ற பிரம்மாண்டமான ஆக்‌ஷன்-பேக் த்ரில்லரைப் பார்ப்பதற்கு முன்பாக பார்த்தார்கள், இது இரு  திரைப்பட உலகங்களுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள நிறைய பங்களித்தது என்பது குறிப்பிடதக்கது.