தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் விநாயகராஜ்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள். அந்த வகையில், ஆரம்பத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த விநாயகராஜ், சில படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்து கவனம் ஈர்த்தவர், தற்போது வில்லன் உள்ளிட்ட பல வேடங்களில் நடித்து பாராட்டு பெற்று வருகிறார்.
குறிப்பாக, சமீபத்தில் வெளியான ‘லைன்மேன்’ திரைப்படத்தின் தூக்குத்துக்குடி மாவட்டத்தின் உப்பளம் தொழிலதிபர் கதபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியதோடு, வில்லத்தனம் கலந்த தனது நடிப்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார்.
சத்தம் போடுவது, கத்தி, துப்பாக்கி கொண்டு சண்டையிடுவது போன்றவற்றில் மட்டுமே வில்லத்தனம் காட்டாமல், தனது கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் நடிக்கும் விநாயகராஜ், தான் ஏற்று நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். இவருக்கு மட்டும் சரியான வாய்ப்புகளும், கமர்ஷியல் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தால் நிச்சயம், தமிழ் சினிமாவில் இருக்கும் வில்லன் வெற்றிடத்தை நிரப்புவார் என்பது உறுதி.
தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விநாயகராஜை, அடுத்த ஆண்டு முதல் கதையின் நாயகனாக பல படங்களில் பார்க்கலாம். அந்த அளவுக்கு அவருக்கு கதையின் நாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
’ஆஞ்சநேயா’, ’திருப்பதி’, ’சிகரம் தொடு’, ’புலி வருது’, ’மாமனிதன்’, ’திருவின் குரல்’, ’பீட்சா 3’, ’லைன்மேன்’ ஆகிய படங்கள் ஒவ்வொன்றிலும், தனது தனித்திறமையை காட்டிய விநாயகராஜ், புத்தாண்டு முதல் கதையின் நாயகனக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க இருக்கிறார்.