Dec 06, 2017 05:51 AM

என்னைப் பார்த்து பயப்படுவது ஏன்? - விஷால் கேள்வி

என்னைப் பார்த்து பயப்படுவது ஏன்? - விஷால் கேள்வி

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்ட்யிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், நேற்று அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த பல்வேறு பரபரப்பான சம்பவங்களுக்கு பிறகு தேர்தல் அதிகாரி, விஷால் மனு நிராகரிகப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்ரு மாலை வெளியிட்டார்.

 

தனது வேட்பு மனு நிராகரிகப்பட்டது குறித்து நடிகர் விஷால் அளித்த பேட்டியில், “தேர்தல் அதிகாரி என்னுடைய மனு ஏற்கப்பட்டதாக சொன்னதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர் அறிவித்ததை கேட்டு அனைவரும் கைதட்டி வரவேற்றனர். மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இத்தனை சிக்கல்கள் இருக்கும் என்று நினைக்கவில்லை. படத்தில் நடக்கும் காட்சிகளைப் போல் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பங்கள் ஏற்பட்டன. 

 

மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இது தான் கதியா? ஜனநாயக நாட்டில் சுயேச்சை வேட்பாளர் போட்டியிடக் கூடாதா? கடந்தமுறை பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்தானது, இந்தமுறை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு கீழ்த்தரமாக போயுள்ளது. டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்டாக இன்று நடந்துள்ளது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. எதற்காக என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டது என புரியவில்லை. 

 

என்னைக் கண்டு ஏன் அச்சப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியவில்லை. வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்படும். 

 

முன்மொழிந்தவர்கள் இரண்டு பேரின் வீட்டின் முன்பு ஆளும்கட்சியின் ஆட்கள் இருந்து கொண்டு மிரட்டுகின்றனர். முன்மொழிந்தவரை மிரட்டியது மதுசூதனன் ஆட்களா என்பது அவரிடம் கேட்டால் தான் தெரியும்.  சுயேச்சையாக போட்டியிடும் இளைஞர் ஒருவரை ஆதரித்து அவரை வெற்றியடையச் செய்வேன். அவர் மூலம் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வேன்.” என்று தெரிவித்தார்.