Jan 16, 2022 04:21 AM

படப்பிடிப்பில் நடிகைக்கு தொல்லைக் கொடுத்த நடிகர் விஷால்!

படப்பிடிப்பில் நடிகைக்கு தொல்லைக் கொடுத்த நடிகர் விஷால்!

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இதில் நாயகியாக தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாதி நடித்திருக்கிறார். இவர்களுடன் மாரிமுத்து, ரவீனா ரவி, பாபுராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

வரும் ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் விஷால் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “கொரோனாவின் இக்கட்டான சூழலில் இந்த விழா நடத்துவது குறித்து தயக்கம் இருந்தது. து.ப. சரவணனின் 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும்படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. அவரை கூப்பிட்டு பாராட்டினேன். அவரிடம், நல்ல கதை இருந்தால் கூறுங்கள் என்றேன். அப்படி உருவானது தான் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் எனக்கு பிடித்தது கதையை விட திரைக்கதை தான். புதிய இயக்குனருக்குள் இருக்கும் வெறியைப் பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை குடுத்திருக்கிறேன். சரவணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

 

புது இயக்குநரிடம் நல்ல கதையெய் கேட்டு விட்டால், யுவன் தான் இசையமைப்பாளர் என்று கூறுவேன். இப்படத்திருக்கும் அதேபோல் யுவன் தான் மியூசிக். நாயகி டிம்பிளை ஒரு விழாவில் எடுத்த ஸ்டில்லை பார்த்து ஒப்பந்தம் செய்தோம். அவரை இப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். தமிழில் நீண்ட தூரம் பயணிப்பார் என்பதில் சந்தேகமில்லை. நாயகனை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் சில படங்கள் தான் வெற்றியடையும். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் குடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம் அனைத்துமே வெற்றியடையும். அந்த வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெரும்.” என்று கூறியவர், படப்பிடிப்பில் நடிகை ரவீனாவை என்னப்போல் யாரும் தொல்லை கொடுத்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவரை தொல்லைப்படுத்தியிருக்கிறேன். இருந்தாலும், அவர் திறமையாக நடித்திருக்கிறார், என்றும் தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசியவர், ”மாரிமுத்து எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் அழ வைத்து விடுவார். மாரிமுத்து என்னிடம், நீ சண்டையை விடவே மாட்டியா? என்பார். அதை எதிரி தான் முடிவு செய்யணும் என்று கூறுவேன். இது தான் படத்தின் கரு.

 

வாசுகி என்னுடைய நெருங்கிய தோழி. என் பெற்றோர், மேலாளரை விட நான் படப்பிடிப்பிற்கு சென்றேனா இல்லையா என்று வாசுகி தான் முதலில் விசாரிப்பார். என்னைப் பொறுத்தவரை கமலா சினிமாஸ் திரையரங்கம் இல்லை; கோவில்.என்னுடைய ரசிகர்கள் எப்போதும் என்னுடைய நண்பர்கள் என்று தான் கூறுவேன்.” என்றார்.

 

Veerame Vaagai Soodum Press Meet

 

இயக்குநர் து.ப.சரவணன் பேசுகையில், “இந்த கதை வெற்றியடையும் என ஊக்கமளித்தவர் கருந்தேள் ராஜேஷ். அதேபோல், இறுதி வரை துணையாக இருந்தவர் பொன் பார்த்திபன். இந்த வாய்ப்பு குடுத்த விஷால் சாருக்கு நன்றி. இன்று நான் இங்கு நிற்பதற்கு காரணம் விஷால் சார் தான். இப்படத்தின் கதையை விஷால் சாரிசம்  கூறின பிறகு, யுவனிடம் கூறுங்கள் என்றார். பிறகு யுவன் சாரிடம் 30 நிமிடம் என்று தான் கதை சொல்ல ஆரம்பித்தேன். ஆனால், ஒன்றரை மணி நேரம் ஆனது. பிறகு விஷால் சார் என்னை அழைத்து, யுவன் கதை ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னார்.  அந்த பெயரைக் காப்பாற்று என்றார். அது இந்த நிமிடம் வரை என் மனதில் அப்படியே இருக்கிறது. அதை ஓரளவு நிறைவெற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.” என்றார்.