Sep 12, 2017 06:42 PM

’விவேகம்’ நல்ல படமா? - மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்!

’விவேகம்’ நல்ல படமா? - மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்!

’விவேகம்’ என்றால் என்ன? என்ற கேள்வி தற்போது கேட்கப்பட்டால், ’தோல்வி’ அல்லது ‘படு தோல்வி’ என்று தான் பலர் பதில் சொல்வார்கள். அந்த அளவுக்கு படத்திற்கு படு மோசமான விமர்சனங்கள் வந்தன. அப்படி இருந்தும் சில நகரங்களில் லாபத்தை ஈட்டியதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் படக்குழுவினர் தரப்பில் இதுவரை விவேகம் படம் குறித்த லாபம் நஷ்ட்டம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

 

அதே சமயம் விவேகம் படத்திற்கு எதிராக விமர்சனம் செய்த சிலரை, திரையுலகினர் கடுமையாக தாக்கி பேசினார்கள்.

 

இந்த நிலையில், அஜித்தால் இயக்குநராக அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், விவேகம் தோல்வி படமா அல்லது வெற்றி படமா என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

 

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேடியில் முருகதாஸ் விவேகம் படம் குறித்து பேசுகையில், “அஜித் உழைப்பின் உச்சகட்டம் என்று தான் சொல்லணும். இந்த படம் பல இடங்களில் அஜித் என்னை பிரமிக்கவைதுள்ளர். இப்படி ஒரு சண்டைகாட்சிகள் இவரால், அதாவது இவரின் உடல்நிலை இருக்கும் நிலையில் செய்துள்ளார் என்றால் அது மிக பெரிய சாதனை என்று தோன்றுகிறது. அதே போல இயக்குநர் சிவா இந்த படத்துக்கு மிகவும் மெனகெடல் திரையில் தெரிகிறது அஜித்தை வைத்து சிவாவால் மட்டும் தான் இப்படி ஒரு படம் கொடுக்க முடியும் காரணம் அவர்களின் புரிதல் தான்

 

இந்த படத்தை ஏன் இப்படி விமர்சனம் செய்தார்கள்? என்ற கேள்விக்குறியும் மனதில் உண்டு. எல்லோரிடமும் அன்பாக பழக கூடியவர், மனதில் பட்டதை அப்படியே தைரியமாக பேச கூடியவரை, ஏன் இப்படி விமர்சனம் செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதேபோல், ஒரு படத்தை விமர்சிக்கும் போது அந்த படத்தின் நிறை மற்றும் குறைகளை சொல்ல வேண்டும், அதை விட்டு அவரை பற்றி தவறாக பேசுவது சரியில்லை.” என்று தெரிவித்துள்ளார்.