ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் ’விழித்தெழு’!

சிவகங்கை நகராட்சியின் நகர்மன்றத் தலைவரும், பத்திரிகையாளருமான சி.எம்.துரை ஆனந்த், ஆதவன் சினி கிரியேஷன் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘விழித்தெழு’.
அசோக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக காயத்ரி ரெமா நடிக்க, பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி, வினோதினி, வில்லு முரளி, ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம், நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ், லட்டு ஆதவன், கார்த்திக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் இப்படத்தின் தயாரிப்பாளர் சி.எம்.துரை ஆனந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆன்லைன் சூதாட்ட மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இப்படம், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப விறுவிறுப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவும் உருவாகியுள்ளது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமிழ்செல்வன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இனிய கதிரவன் மற்றும் ஆ.சம்பத்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். நல்லதம்பி இசையமைத்திருக்கிறார். எஸ்.ஆர்.முத்துக்குமார் படத்தொகுப்பு செய்ய, எஸ்.ஆர்.ஹரிமுருகன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஸ்டைல் பாலா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
மதுரை மற்றும் சிவகங்கை சுற்றுப்பகுதிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்துக்கொண்டு டிரைலரை வெளியிட்டனர்.