Aug 23, 2021 06:34 AM

”என் சென்னை, யங் சென்னை...” பாடலால் பரபரப்பான சென்னை!

”என் சென்னை, யங் சென்னை...” பாடலால் பரபரப்பான சென்னை!

வந்தாரை வாழவைக்கும் சென்னையின் பெருமையையும், சென்னை இளைஞர்களின் துடிதுடிப்பான செயல்களையும், வீரத்தையும் போற்றும் விதமாக விருது ஒன்றை அறிமுகப்படுத்துவதோடு, அவர்களை கொண்டாடும் விதமாக “என் சென்னை, யங் சென்னை...” என்ற பாடலும் வெளியாகியுள்ளது.

 

சென்னையை போற்றி பாடும் பாடல்கள் எத்தனையோ வந்திருந்தாலும், சென்னை இளைஞர்களின் பெருமையையும், சமூக பணிகளையும் உலகிற்கு எடுத்துரைக்கவும், கொண்டாடவும் வெளியான முதல் பாடலாக அமைந்துள்ள “என் சென்னை, யங் சென்னை...” என்று தொடங்கும் இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

 

இதற்கிடையே கடந்த வாரம் வெளியான இந்த பாடலின் டீஸருக்கு இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதோடு, பாடல் மீது மிக்கபெரிய எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

“என்ன மயிலு...” பாடல் புகழ் பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை நிஷாந்த் ராஜு எழுத, பிரபல பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான அந்தோணி தாசன், மும்பையின் டோனி செபாஸ்டியன், அல்கா அஜித் ஆகிய நட்சத்திரப் பாடகர்கள் பாடியுள்ளனர்.

 

சென்னையை ரசித்து நேசித்து வாழ்ந்து வரும் சுந்தர், ஷங்கர், பிரகாஷ் ஆகியோரல் தொடங்கப்பட்ட ஐடியா ஃபேக்டரி என்ற நிறுவனம், வாழவைக்கும் செனையை வாழ்த்துவதற்காக இந்த பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. மனம் தளராத ஊக்கமும் துடிப்பும் மிக்க சென்னை இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர்கள் இவர்கள்.

 

மேலும், முதல் ‘சென்னை தின விருது’ வழங்கப்பட உள்ளது. அவை, சென்னைக்காக சென்னையால், செனைக்கு-என்ற கோணத்தில் அளிக்கப்பட இருக்கிறது.

 

ஆம், இந்தப் புதுமையான விருது, இயற்கைச் சீற்றங்களாலும் பெருந்தொற்றாலும் பாதிக்கப்பட்ட சென்னையை மீட்க தன்னலமற்ற சேவை செய்த, வெளியில் அறியப்படாத நாயகர்களுக்கு வழங்கப்படுகிறது. பாலின பேதமின்றி வழங்கப்படும் இந்த விருது தேர்வுக்கான நடுவர் குழுவின் தலைவராக புகழ்பெற்ற பத்திரிகையாளர் வள்ளிதாசன் செயல்படுகிறார். 

 

இம்முயற்சிகளுக்கு விவேக்ஸ் லிமிடேட், ஈக்விடாஸ் வங்கி, நாகா ஃபுட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆதரவை வழங்குகின்றன. சென்னையைச் சேர்ந்த நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான பிராண்ட் பிளிட்ஸுடன் இணைந்து ஐடியா ஃபேக்டரி இந்நிகழ்ச்சியை நடத்துகிறது.

 

’சென்னை கீதம்’ பாடல் வெளியீடு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக் ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது.