யோகி பாபு, விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘குய்கோ’! - நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது

யோகி பாபு மற்றும் விதார்த் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் ‘குய்கோ’. விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன் இயக்குநராக அறிமுகாமும் இப்படத்தை எ.எஸ்.டி பிலிம்ஸ் வழங்க, பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராம் பாண்டியன் படத்தொகுப்பு செய்ய, சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனித்துள்ளார்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், வரும் நவம்பர் 24 ஆம் தேதி படம் வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘குய்கோ’ திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.