’தப்பாட்டம்’ திரை விமர்சனம்
Casting : துரை சுதாகர், டோனா ரொசாரியோ
Directed By : முஜிபுர் ரஹ்மான் எஸ்
Music By : பழனி பாலு
Produced By : ஆதம் பாவா
கண்ணால் பார்ப்பது பொய், காதால் கேற்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய், என்ற தத்துவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம், சந்தேகத்தால் ஒரு குடும்பத்தில் எப்படிப்பட்ட பிரசின்னை ஏற்பட்டு, என்னவெல்லாம் நடக்கிறது என்பதை சொல்லியிருக்கிறது.
தப்பாட்டம் அடித்து பிழைக்கும் ஹீரோ துரை சுதாகருக்கும், அவரது அக்கா மகள் நாயகி டோனாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தோஷமாக இருக்க, ஊர் பண்ணையார் மகனின் பேச்சைக் கேட்டு தனது மனைவி மீது ஹீரோ துரை சுதாகர் சந்தேகப்படுகிறார். இதனால் கணவன் - மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படுவதோடு, இருவரும் பிரியும் சூழலும் ஏற்படுகிறது. இப்படி காதல் கேட்ட விஷயத்தை தீர விசாரிக்காமல், தனது மனைவி மீது சந்தேகபட்ட ஹீரோ மனம் திருந்தினாரா பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா, என்பதே ‘தப்பாட்டம்’ படத்தின் மீதிக்கதை.
கிராமத்து பின்னணியில், பழைய தமிழ் சினிமா பாணியில் படத்தை எடுத்திருந்தாலும், சொல்ல வந்த விஷயத்தை ரொம்ப தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.
தப்பாட்டம் அடிக்கும் கலைஞர் வேடத்தில் நடித்திருக்கும் ஹீரோ துரை சுதாகருக்கு இது தான் அறிமுகப் படம் என்றாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார். பப்ளிக் ஸ்டார் என்ற பட்டப் பெயருடன் களம் இறங்கியிருக்கும் இவர், முதல் படத்திலேயே சவால் மிகுந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
ஹீரோயின் டோனா ரோசாரியா, முதல் பாகத்தில் விளையாட்டுப் பெண்ணாக நடித்திருப்பவர், திருமணத்திற்கு பிறகு அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹீரோவின் மாமாவாக நடித்திருப்பவர், ஹீரோயின் அம்மா என்று அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில் பெண்களுக்கு ஆதரவான ஒரு படமாக வெளியாகியிருக்கும் இப்படத்தில், யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு, பெண்கள் மீது சந்தேகப்படக் கூடாது, என்ற கருத்தை ரொம்ப அழுத்தமாக வலியுத்தியுள்ளது. இயக்குநர் எஸ்.முஜிபுர் ரகுமானின் காட்சிகள் ரொம்ப பழையது என்றாலும், அவர் சொல்லியிருக்கும் மெசஜ் அனைத்து காலத்திற்கும் ஏற்றதாக உள்ளது. ராஜனின் ஒளிப்பதிவும், பழனி பாலுவின் இசையும் கதைக்கு ஏற்பட பயணித்திருக்கிறது.
மொத்தத்தில் தவறான ஆட்டமாக இல்லாமல் சுமாரான ஆட்டமாக இருக்கிறது இந்த ‘தப்பாட்டம்’