Jul 17, 2017 07:59 AM

பண்டிகை

croppedImg_612150520.jpeg

Casting : Krishna, Anandi, Saravanan, Madhusudhanan, Karunas

Directed By : Feroz

Music By : Vikram RH

Produced By : Vijayalakshmi Ahathian

எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல், இஷ்ட்டத்திற்கு அடித்துக் கொள்லும் ஸ்ட்ரீட் பைட் என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள ஆக்‌ஷன் படம் தான் ‘பண்டிகை’.

 

அப்பா, அம்மாவை இழந்த கிருஷ்ணா சிறு வயது முதல் காப்பகத்தில் வளர்கிறார். கோபக்காரரான கிருஷ்ணா அடிதடியில் பட்டையை கிளப்பினாலும், அதைவிட்டுவிட்டு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். நாயகி ஆனந்தியை கண்டதும் காதல் கொள்ளும் கிருஷ்ணா ஆனந்தி நினைவாக இருக்கிறார். 

 

இதற்கிடையே வீடியோ கேம்ஸ் கடை நடத்தி வரும் சரவணன், சூதாட்டத்தில் தனது சொத்துக்களை இழந்துவிட்டு அதை மீண்டும் பெறுவதற்கான முயற்சியில் இருக்க, அந்த சமயத்தில் கிருஷ்ணாவின் ஆக்‌ஷனை லைவாக பார்ப்பவர், இப்படி வெட்டியாக சண்டை போடுவதை விட, நான் சொல்லும் இடத்தில் சண்டை போட்டால், பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்று கூறுகிறார். முதலில் மறுக்கும் கிருஷ்ணா, பிறகு சரவணன் சொன்ன இடத்தில் சண்டைபோட்டு வெற்றி பெறுவதோடு, யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில், பெரிய சண்டையிலும் வெற்றி பெற்றுவிடுகிறார். கிருஷ்ணா ஒரு புறம் வெற்றி பெற்றாலும், சரவணனோ மறுபுறம் மீண்டும் தனது பணத்தை இழந்துவிட, பிறகு தான் தெரிகிறது, இந்த சூதாட்டத்தை நடத்தும் மதுசூதனனின் தில்லாலங்கடி வேலை, சரவணன் போன்றவர்களின் இழப்புக்கு காரணம் என்று. அதே தில்லாலங்கடி வேலையால் மதுசூதனிடம் இருக்கும் பணத்தை அபேஷ் பண்ண சரவணனும், கிருஷ்ணாவும் திட்டம் போட, அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா, என்பது தான் ‘பண்டிகை’ படத்தின் கதை.

 

இன்னும் ஹீரோவாகவே ஏற்றுக் கொள்ளாத கிருஷ்ணாவை நம்பி இப்படி ஒரு மாஸ் ஆக்‌ஷன் கதையை இயக்கிய இயக்குநர் பெரோஸ் மற்றும் தயாரிப்பாளர் விஜயலட்சுமியின் தைரியம், படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளை விட பெருசாக தான் இருக்க வேண்டும்.

 

சும்மா நடிக்க சொன்னாலே கிருஷ்ணாவின் அலப்பறை தாங்காது, இதில் கோபத்தோடும், வெறியோடும் சண்டைப் போடுபவர் போல நடிக்க வேண்டும் என்றால், சும்மா இருப்பாரா, விட்டா ஸ்கீரின கிழிச்சிட்டு ரசிகர்கள் முகத்திலும் ஒரு குத்து விட்டுடுவார் போல.

 

ஹீரோயின் ஆனந்தி அழகாக வந்து போகிறார். படம் முழுவதுமே வரும் சரவணனுக்கு ‘பருத்திவீரன்’ படத்திற்கு பிறகு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்திருக்க, அவரும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார். அருள்தாஸ், மதுசூதனன் என்று படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

 

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் படத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. ஹாலிவுட் படங்களில் பார்த்த ஸ்ட்ரீட் பைட், முதல் முறையாக கோலிவுட்டில் பார்ப்பதால் கரு புதிதாக இருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளும், திரைக்கதையின் இரண்டாம் பாதி முழுவதும் வரும் ஆக்‌ஷம் மூடும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

 

இயக்குநர் பெரோஸ், தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான கருவை தேர்வு செய்தாலும், அதற்கான திரைக்கதையை நாம் ஏற்கனவே பார்த்த சில படங்களின் சாயலில் அமைத்திருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்துள்ளது. இருந்தாலும் இந்த ‘பண்டிகை’ படம்  ஒரு முறை பார்க்கலாம் என்ற விதத்திலே இருக்கிறது.