Feb 13, 2019 10:57 AM

‘அவதார வேட்டை’ விமர்சனம்

80bb5eb56c3b926f9bc3b86acb2bf76a.jpg

Casting : VR Vinayak, Meera Nair, Radharavi, Riaz Khan, Poser Star Srinivasan

Directed By : Star Kunjumon

Music By : Michele

Produced By : Star Kunjumon

 

குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘அவதார வேட்டை’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

குழந்தைகளை கடத்தி, அவர்களது உடலுறுப்புகளை திருடும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், அதன் பின்னணியில் இருப்பவர்களை கூண்டோடு பிடிப்பதற்காக காவல் துறை ஸ்பெஷல் டீம் ஒன்றை நியமித்து தேடுதல் வேட்டை நடத்துகிறது. அதே நேரத்தில் ஹீரோ வி.ஆர்.விநாயக், அதே கூட்டத்தை பிடிப்பதற்காக அவதாரம் எடுத்து குற்றவாளிகளை வேட்டையாட கிளம்ப, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை.

 

அறிமுக ஹீரோ வி.ஆர்.விநாயக் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். போலீஸாக வந்து ராதாரவியை மிரட்டி பணம் பறிப்பவர், ”அக்கா..அக்க...” என்று கோரி சோனாவிடம் இருந்து ஆட்டைய போடுவது, என்று தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

 

ஹீரோயினாக நடித்திருக்கும் மீரா நாயர், ராதாரவி, ரியாஸ்கான், வில்லியாக நடித்திருக்கும் சோனா என்று அனைவரும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருந்தாலும், பவர் ஸ்டார் மட்டும் எப்போதும் போல பொம்மை போல வந்து போகிறார்.

 

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் கதை என்றாலும் அதை சிறிய பட்ஜெட்டில் சொல்லியிருக்கும் இயக்குநர் ஸ்டார் குஞ்சுமோன், திரைக்கதையையும், காட்சியையும் விறுவிறுப்பாகவே அமைத்திருக்கிறார். போலீஸ் அதிகரியாக ஹீரோவுக்கு எண்ட்ரிக் கொடுத்துவிட்டு பிறகு அவர் போலீஸ் அல்ல பொருக்கி என்று காட்டும் இடம் ரசிக்க வைக்கிறது. 

 

மைக்கேலின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணிக்கிறது. ஏ.காசி விஸ்வாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

 

ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை காதல், காமெடி என்று கலந்து கமர்ஷியல் படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் தனக்கு கிடைத்த வசதிகளை வைத்துக் கொண்டு அதை செய்ய முடியாமல் திணறியிருப்பது படத்தின் பல இடங்களில் தெரிந்தாலும், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவே சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘அவதார வேட்டை’ மூலம் நல்ல முயற்சியை மேற்கொண்டிருப்பவர்கள், எதிர்காலத்தில் நல்ல பயிற்சியோடு படம் எடுத்தால் நல்லது.

 

ரேட்டிங் 2/5