Jul 13, 2019 06:57 AM

’போதை ஏறி புத்தி மாறி’ விமர்சனம்

2a9815435c126f9950a459f97af8ff52.jpg

Casting : Dheeraj, Pradaini Surva, Radha Ravi, Charle, Mime Gopi

Directed By : Chandru KR

Music By : KP

Produced By : Sreenidhi Sagar

 

’ஹங் ஓவர்’ ஆங்கிலப் படத்தின் பாதிப்பாக உருவாகியிருக்கும் ‘போதை ஏறி புத்தி மாறி’ எப்படி என்று பார்ப்போம்.

 

திருமணத்திற்கு முந்தைய நாள் நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுப்பதற்காக நண்பர் வீட்டுக்கு செல்லும் ஹீரோ தீரஜ், போதை மருந்து பயன்படுத்துவதால், ஏற்படும் பிரச்சினைகளும், அதில் இருந்து அவர் மீண்டு வந்தாரா இல்லையா, என்பதும் தான் படத்தின் கதை.

 

சில மணி நேரம் இருக்கும் போதைக்காக இளைஞர்கள் வாழ்க்கையையே இப்படி இழக்கிறார்கள், என்ற மெசஜோடு சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்லப்பட்டிருக்கும் இப்படத்தின் கரு ஹாலிவுட் படமான ‘ஹங் ஓவர்’ படத்தின் காப்பி போல இருக்கிறது.

 

ஹீரோவாக நடித்திருக்கும் தீரஜ், போதை பழக்கம் இல்லாத நபர் முதல் முறையாக போதை பொருளை பயன்படுத்தினால் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்பதை தனது நடிப்பில் காட்டியிருந்தாலும், போதையை அவரது கண்களில் காட்ட தவறியிருக்கிறார். இருந்தாலும், முதல் படத்தில் இந்த அளவுக்கு நடித்ததற்கு சாருக்கு சபாஷ் சொல்லலாம்.

 

ஹீரோயின் துஷாராவின் கதாபாத்திரத்தை விட, பத்திரிகை நிருபராக நடித்திருக்கும் பிரதாயினி சுர்வாவின் வேடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஹீரோயின் நண்பர்களாக நடித்திருப்பவர்களின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.

 

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரே வீட்டில், ஒரு இரவில் நடக்கும் கதை என்றாலும், அதை காட்சிகளாக பார்க்கும் போது அவ்வபோது பிரேமில் வித்தியாசத்தை காட்டுபவர்,  கதை கருவுக்கு ஏற்ற வகையில் கொடுத்திருந்த கலர் டோனால், சில நேரங்களில் நாமும் போதையில் இருப்பது போல உணர செய்கிறது. காட்சிகளை கலர்புல்லாக காட்டும் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்திற்கு இது ஒரு வித்தியாசமான களம் மற்றும் முக்கியமான படம் என்றும் சொல்லலாம்.

 

கே.பி-யின் இசையமைப்பில் பின்னணி இசை திரைக்கதையுடன் ஒட்டி உறவாடுகிறது. காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கவும் செய்திருக்கிறது.

 

ஒரு மனிதனுக்கு போதை தலைக்கு ஏறிவிட்டால், அவன் என்ன செய்வான், அவனது பார்வையும், எண்ணமும் எப்படி இருக்கும் என்பதை ஹீரோ கதாபாத்திரத்தின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சந்த்ரு கே.ஆர், இரண்டாம் பாதியில் நடக்கும் கொலைகளால் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதே சமயம், சஸ்பென்ஸுக்கான விடை தெரிய வரும் போது, இவ்வளவு தானா? என்ற சலிப்பு ஏற்படுவது படத்திற்கு மைனசாக இருக்கிறது.

 

மொத்தத்தில், ‘போதை ஏறி புத்தி மாறி’ நல்ல மெசஜ் சொல்லும், சுமாரான படமாக உள்ளது.

 

ரேட்டிங் 3/5