May 30, 2024 06:22 PM

’புஜ்ஜி அட் அனுப்பட்டி’ திரைப்பட விமர்சனம்

c7a48617e0a413fb011d779039a93205.jpg

Casting : Kamalkumar, Vaitheeshwari, Karthik Vijay, Baby Pranithi Sivashankaran, Lawanya Kanmani, Ramkumar, Meena, Varadharajan

Directed By : Ram Kandasamy

Music By : Karthik Raja

Produced By : Kavilayaa Creations

 

கோவை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறுமி பிரணிதி சிவ சங்கரன், ஆட்டுக்குட்டி ஒன்றை வளர்க்கிறார். அதன் மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தும் அவர், அதற்கு புஜ்ஜி என்று பெயர் வைக்கிறார். இதற்கிடையே, சிறுமியின் தந்தை மது குடிப்பதற்காக ஆட்டை ஒருவருக்கு விற்பனை செய்துவிட, சிறுமியும், அவரது அண்ணனும் அந்த ஆட்டை தேடி செல்கிறார்கள். அவர்களுக்கு ஆடு மீண்டும் கிடைத்ததா?, இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

கதையின் முதன்மை கதாபாத்திரமான குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன் மற்றும் சிறுவன் கார்த்திக் விஜய் ஆகியோர் எந்தவித பதற்றமும் இன்றி நடித்திருப்பது திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் மண்ணின் மக்களாக பயணித்திருக்கிறார்கள்.

 

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் கேட்கும்படியும், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும் பயணித்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் ராம் கந்தசாமி, குறும்படமாக எடுக்க வேண்டிய கதையை முழுநீள திரைப்படமாக எடுப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டும்படி இருந்தாலும், சுவாரஸ்யமான படமாக பயணிக்க தவறியிறுக்கிறது.

 

ஆட்டுக்குட்டி மீது அதிகமான அன்பு செலுத்தி சிறுமி வளர்த்தாலும், சிறுமியுடனான ஆட்டுக்குட்டியின் பினைப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் இல்லாதது திரைக்கதையை பலவீனமடைய செய்வதோடு, பார்வையாளர்களாலும் ஆட்டுக்குட்டியை செல்லப்பிராணியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

ஆட்டை தேடி செல்லும் சிறுவன் மற்றும் சிறுமிக்கு ஆடு கிடைத்துவிடுமா? என்ற எதிர்பார்ப்பு படத்தை சற்று சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதோடு, ஒரு எளிமையான கதையை குழந்தைகள் பார்வையில் சொல்லிய விதமும் பாராட்டும்படி இருக்கிறது.

 

மொத்தத்தில், இந்த  ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’-யை பொறுமை இருப்பவர்கள் தாராளமாக பார்க்கலாம்.

 

ரேட்டிங் 2.5/5