‘கேமரா எரர்’ திரைப்பட விமர்சனம்
Casting : Sudhir, Prabhakaran, Harini, Simran
Directed By : Agaran
Music By : Shravan Kalai
Produced By : Dubai Mishra
உண்மைச் சம்பவங்களை திரைப்படமாக எடுப்பதற்காக ஒரு குழுவினர் மலைகிராமத்திறு செல்கிறார்கள். அங்கு இருக்கும் ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்தும்போது ஒவ்வொரு நாளும் படக்குழுவினரின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது. இது குறித்து ஆராயும் போது, அங்கே இறந்து போனவர்களின் ஆவிகள் இவர்களுடன் கலந்திருக்கும் உண்மை தெரிய வருகிறது.
இப்படி பேய்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் படக்குழுவினர் படப்பிடிப்ப முடித்தார்களா? அங்கிருந்து தப்பித்தார்களா? என்பதை திகிலாகவும், கிளு கிளுப்பாகவும் சொல்வது தான் ‘கேமரா எரர்’.
படத்தில் நடித்திருக்கும் சுதிர், பிரபாகரன், ஹரிணி, சிம்ரன் உள்ளிட்ட அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஷ்ரவன் கலை இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் பாலாஜி எஸ்.பி இருட்டு காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அகரன், படப்பிடிப்பில் காட்சியை விளக்கிவிட்டு ஆக்ஷன் என்றதும் அக்காட்சியில் நடிப்பவர்களே யோசித்து வைத்த வசனத்தை சொல்லி நடிக்க வேண்டும். இப்படித்தான் படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான முயற்சியாக இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் அகரன், கிளு கிளுப்பான காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பதோடு, சினிமாவில் படுக்கையை பகிர்ந்துகொண்டால் தான் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
படத்தில் ஆபாசக் காட்சிகள் அதிகமாக இருந்தாலும், தவறான பாதையில் செல்பவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும், என்ற மெசஜையும் சொல்லியிருக்கிறார்கள்.
மொத்தத்தில், ‘கேமரா எரர்’ ஹாட்.
ரேட்டிங் 2/5