’தேஜாவு’ விமர்சனம்
Casting : Arulnidhi, Madhubala, Smirthi Venkat, Kali Venkat, Achyuth
Directed By : Aravind Srinivasan
Music By : Ghibran
Produced By : White Carpet Films and PG Muthiah Production
டிஜிபி மதுபாலாவின் மகள் ஸ்முருதி வெங்கட் கடத்தப்படுகிறார். அவரை கண்டுபிடிக்கும் சிறப்பு அதிகாரியாக நாயகன் அருள்நிதியை மதுபாலா நியமிக்கிறார். கதப்பட்ட பெண்ணை அருள்நிதி எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதையும் அதன் பின்னணியையும் சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது தான் ‘தேஜாவு’ படத்தின் கதை.
காவல்துறை அதிகாரி வேடத்திற்கு ஏற்ற தோற்றம், உடம் மொழி என்று கச்சிதமாக பொருந்தும் அருள்நிதி, நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும் சரி, செண்டிமெண்ட் காட்சிகளிலும் சரி, அளவாக நடித்து கவர்கிறார்.
போலீஸ் டிஜிபி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மதுபாலா, பெரிய பதவி என்பதால் நடிப்பையும் பெரிதாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், சில இடங்களில் அது ஓவர் டோஸ் ஆகி அந்த கதாப்பாத்திரத்தையே பலவீனமாக்கி விடுகிறது.
எழுத்தாளராக நடித்திருக்கும் அச்யுத்குமார், போலீஸாக நடித்திருக்கும் காளி வெங்கட், ஸ்முருதி வெங்கட் என படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்களும் அவர்களுடைய நடிப்பும் காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.
திரைக்கதையை வேகமாக நகர உதவியிருக்கும் ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பி.ஜி.முத்தையாவின் ஓளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
எழுத்தாளர் ஒருவர் எழுதுவதெல்லாம் நிஜத்தில் அப்படியே நடக்கிறது, என்ற வித்தியாசமான கருவை வைத்துக்கொண்டு, அதில் காவல்துறையின் எதார்த்தமான நடவடிக்கை உள்ளிட்ட பல விஷயங்களை சேர்த்து இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் சுவாரஸ்யமான மற்றும் புத்திசாலித்தனமான திரைக்கதை அமைத்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் இழுத்துச் செல்லும் இயக்குநர் அரவிந்த் சீனிவாசன், காட்சிகளை வேகமாக நகர்த்தினாலும் தான் சொல்ல வந்ததை மிக தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
சில இடங்களில் சிறு குறைகள் இருந்தாலும் அதை அருள்நிதி தனது நடிப்பு மூலம் சரிக்கட்டி படத்தை நிமிர செய்துவிடுகிறார்.
மொத்தத்தில், ‘தேஜாவு’ தலைப்பை போன்று படமும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறது.
ரேட்டிங் 3.5/5