Mar 16, 2020 08:34 AM

’தாராள பிரபு’ விமர்சனம்

29e9ceb09ebc64e1a550eedd6f29ed23.jpg

Casting : Harish Kalyan, Tanya Hope, Vivek, Anupama Kumar, Sachu, R. S. Shivaji

Directed By : Krishna Marimuthu

Music By : Anirudh Ravichander, Sean Roldan, Vivek-Mervin, Inno Genga, Madley Blues, Bharath Shankar, Kaber Vasuki, Oorka

Produced By : Screen Scene Media Entertainment

 

கால்பந்தாட்ட வீரரான ஹரிஷ் கல்யாண், விந்து தானம் செய்யக்கூடிய ஆரோக்யமான நபரை தேடிக்கொண்டிருக்கும் மருத்துவர் விவேக்கிற்கு உதவி செய்கிறார். பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம் ஆனவுடன், அவருக்கும் குழந்தை பிறப்பில் பிரச்சினை ஏற்பட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை, நகைச்சுவையாக சொல்வதுதான் கதை.

 

ஆரோக்யமான தாம்பத்ய உறவு மற்றும் குழந்தை பிறப்பு குறித்து பேசியிருக்கும் இப்படம், மிக அழுத்தமான கதையாக இருந்தாலும், அதை இயக்குநர் காமெடியாக கையாண்டிருக்கிறார்.

 

ஹரிஷ் கல்யாண், தனது சுறுசுறுப்பான நடிப்பு மூலம் கவர்கிறார். விந்து தானம் செய்துவிட்டு, அதை மனைவியிடம் சொல்ல முடியாமல் திணறுவது உள்ளிட்ட காட்சிகளில் நடிப்பில் அசத்துகிறார்.

 

கதாநாயகி தன்யா ஹோப்பின் கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது. திருமணமான பெண்களின் பிரச்சினைகளை பிரபதிலிக்கும் அவரது வேடமும், அதை அவர் கையாண்ட விதமும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

 

மருத்துவராக நடித்திருக்கும் விவேக் நம்மை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறார். ஆர்.எஸ்.சிவாஜி வரும் அனைத்து இடங்களுமே காமெடி சரவெடியாக இருக்கிறது.

 

அனிருத், சீன் ரோலண்ட், விவேக்-மெர்வின், இன்னோ கெங்கோ, மெட்லி புளூஸ், பாரத் சங்கர், கபீர் வாசுகி, ஊர்க்கா ஆகியோர் ஆளுக்கு ஒரு பாடல் கொடுத்திருக்கிறார்கள். செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவு ரம்மியமாக இருக்கிறது.

 

இந்தி படத்தின் தமிழ் ரீமேக் என்றாலும், படத்தின் கரு சிதையாமல், அதே சமயம், தமிழ் ரசிகர்களை கவரும் படமாகவும் கிருஷ்ணா மாரிமுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.

 

விமர்சனத்திற்கு உள்ளான கரு என்றாலும், எந்தவித விமர்சனத்திற்குள்ளும் சிக்காதவாறு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் கிருஷ்ணா, நகைச்சுவை என்ற எசன்ஸை சேர்த்து நல்ல மெசஜையும் சொல்லியிருக்கிறார். ஆனால், முதல் பாதி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திய இயக்குநர், இரண்டாம் பாதியை சுவாரஸ்யம் இல்லாமல் கொண்டு செல்வது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.

 

ரேட்டிங் 2.75/5