Dec 08, 2018 02:18 PM

’தோனி கபடிகுழு’ விமர்சனம்

4f1d193b0f1f50553f52ab6098fb63b5.jpg

Casting : Abhilash, Leema, Thanali, Saranya, Senthilvel

Directed By : P.Iyappan

Music By : Roshan Joseph C.J

Produced By : S.Nandakumar

 

கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த ‘தோனி கபடிகுழு’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்களாக ஹீரோ அபிலாஷும் அவரது நண்பர்களும் இருக்கிறார்கள். எந்த நேரமும் கிரிக்கெட்டும், கிரவுண்டுமாக இருக்கும் அவர்கள் தாங்கள் கிரிக்கெட் விளையாடும் கிரவுண்டை கோயிலாக பாவிக்கிறார்கள். இதற்கிடையே, அந்த கிரவுண்டை ஒருவர் விலைக்கு வாங்கியதால், அங்கு யாரும் விளையாட முடியாத சூழல் ஏற்பட, அந்த கிரவுண்டை தாங்களே விலைக்கு வாங்க ஹீரோவும், அவரது நண்பர்களும் முடிவு செய்கிறார்கள். அதற்காக பல வழிகளில் பணம் திரட்டினாலும், ஒரு கட்டத்தில் ரூ.20 ஆயிரம் தட்டுப்பாடு ஏற்பட, அந்த பணத்திற்காக கபடி விளையாட களத்தில் இறங்கும் இந்த கிரிக்கெட் வீரர்கள், கபடி போட்டியில் வெற்றி பெற்று கிரவுண்டை கைப்பற்றினார்களா இல்லையா, என்பதே படத்தின் மீதிக்கதை.

 

விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படம் என்றாலே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது, ஆனால், இந்த படத்தில் அவை இரண்டுமே கொஞ்சம் கூட இல்லை என்பது பெரிய வருத்தம்.

 

ஹீரோவாக புதுமுகம் அபிலாஷ் நடித்திருக்கிறார். உணர்ச்சி பொங்க அவர் நடித்திருந்தாலும், அவை எதுக்கும் உதவாமல் போகிறது. ஹீரோயின் லீமா ஏதோ வந்தோமா போனோமா என்று இருக்கிறார். ஹீரோவின் நண்பர்களாக வருபவர்களுக்கும் அதே நிலை தான்.

 

கிரிக்கெட்...கிரிக்கெட்...என்று பைத்தியமாக இருக்கும் இளைஞர்களுக்கு கபடியின் முக்கியத்துவத்தை சொல்லும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பி.ஐயப்பன், திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் படத்தை எடுத்திருக்கிறார்.

 

எளிமையான முறையில் திரைக்கதையை கையாண்டிருப்பவர் எந்த வகையிலும் படம் பார்ப்பவர்களை படம் ஈர்த்துவிட கூடாது என்பதில் ரொம்பவே தெளிவாக இருந்திருப்பது படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது.

 

மொத்தத்தில், இந்த ‘டோனி கபடிகுழு’ கிரிக்கெட்டையும் ஒழுங்காக விளையாடவில்லை, கபடியையும் ஒழுங்காக விளையாடவில்லை.

 

ரேட்டிங் 2/5