Sep 10, 2021 08:00 AM

’டிக்கிலோனா’ விமர்சனம்

b15dc46f19a712dad290cee7a01d6264.jpg

Casting : Santhanam, Yogi Babu, Anagha, Shirin Kanchwala

Directed By : Karthik Yogi

Music By : Yuvan Shankar Raja

Produced By : KSR Studios - Soldiers Factory Kotapadi J Rajesh and KS Sinish KOTAPADI J RAJESH & K S SINISH

 

மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் சந்தானம், டைம் மிஷன் மூலம் கடந்த காலத்திற்கு சென்று, தனது திருமணத்தை நிறுத்த முயற்சிக்க, அதனால் ஏற்படும் குழப்பங்களையும், குளறுபடிகளையும் சிரிப்பாக சொல்லியிருப்பது தான் ‘டிக்கிலோனா’-வின் கதை.

 

முடியை மட்டுமே மாற்றி 3 வேடங்களுக்கான வித்தியாசத்தை காண்பித்திருக்கும் சந்தானம், காமெடியில் எந்தவித குறையும் வைக்காமல் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்.

 

சந்தானத்துடன் போட்டி போட்டு கவுண்டர் கொடுத்தாலும் யோகி பாபுவின் சத்தம் சற்று குறைவாகவே இருக்கிறது. நான் கடவுள் ராஜேந்திரன், ஆனந்தராஜ், முனிஸ்காந்த் ஆகியோர் வழக்கமான வழியில் சிரிப்பு காட்டிவிட்டு செல்கிறார்கள்.

 

நாயகிகள் அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வால கதாப்பாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார்.

 

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்வி, கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்.

 

திருமணமான அனைத்து ஆண்களும் எதிர்கொள்ளும் பிரச்சனை தான் என்றாலும், அதை ஒரு பக்கமாக பேசாமல், மனைவிமார்கள் பக்கத்தின் நியாயங்களையும் பேசி, சிரிக்க வைப்பதோடு, தம்பதிகளை சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.

 

சந்தானத்தின் அக்மார்க்கான நகைச்சுவை எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், ரசிகர்களை ஏமாற்றத வகையில் இருக்கிறது.

 

ரேட்டிங் 3/5