Dec 18, 2021 06:27 PM

’இறுதி பக்கம்’ விமர்சனம்

052875bf29441d151559c8052f54342f.jpg

Casting : Rajesh Balachandran, Amrutha Srinivasan, Vignesh Shanmugam, Sriraj

Directed By : Mano V.Kannadasan

Music By : Johns Rupert

Produced By : Dream Creations

 

எழுத்தாளரான நாயகி அம்ருதா ஸ்ரீநிவாசன், படத்தின் முதல் காட்சியிலேயே கொலை செய்யப்பட, கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டரான நாயகன் ராஜேஷ் பாலச்சந்திரனிடம் ஒப்படைக்கப்படுகிறது. கொலை செய்தது யார்?, கொலையாளியை நாயகன் கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதை பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக சொல்வதே ‘இறுதி பக்கம்’.

 

ஒரு க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும், என்பதற்கு எடுத்துக்காட்டாக பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக நகரும் படத்தில், காதல் மற்றும் காமம் இடையில் இருக்கும் வித்தியாசத்தையும், புரிதலையும் கவிதையாக சொல்லியிருக்கிறார்கள்.

 

எழுத்தாளராக நடித்திருக்கும் அம்ருதா ஸ்ரீநிவாசன், சில படங்களில் நாயகிகளின் தோழியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகியாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். தான் எழுதும் நாவலுக்காக ஒரு பெண் எழுத்தாளர் இப்படியெல்லாம் நடந்துக்கொள்வாரா!, என்று படம் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்தாலும், இறுதியில் அவர் மீது இரக்கம் ஏற்படும் வகையில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

 

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் எளிமையான தோற்றத்தோடும், இயல்பான நடிப்போடும் வலம் வருவது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

 

அம்ருதா ஸ்ரீநிவாசனின் காதலர்களாக நடித்திருக்கும் விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ், கிரிஜா ஹரி, சுபதி ராஜ் என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

பிரவின் பாலுவின் ஒளிப்பதிவும், ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ராம் பாண்டியனின் படத்தொகுப்பு நேர்த்தி. 

 

எழுதி இயக்கியிருக்கும் மனோ வெ.கண்ணதாசன், ஒன்றரை மணி நேரத்தில் ஒரு சுவாரஸ்யமான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். எதிர்ப்பார்க்காத பல திருப்பங்களோடும்,  உண்மையான கொலையாளி யார்? என்ற எதிர்ப்பார்ப்போடும் முழுப்படமும் சுவாரஸ்யமாக நகர இறுதிக்காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் வித்தியாசமான முயற்சி.

 

மொத்தத்தில், ‘இறுதி பக்கம்’ ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத இன்ப அதிர்ச்சி

 

ரேட்டிங் 4/5