Aug 11, 2023 06:37 AM

’ஜெயிலர்’ திரைப்பட விமர்சனம்

44052e9563bf708789223c1027cbbc6a.jpg

Casting : Rajinikanth, Tamanna, Ramya Krishnan, Yogi Babu, Vasanth Ravi, Mirna, Rithvik, Saravanan, Sivaraj Kumar, Mohanlal

Directed By : Nelson

Music By : Anirudh

Produced By : Sun Pictures

 

மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி, மருமகள் மிர்ணா, பேரன் ரித்து என தன் குடும்பம் சகிதமாக அமைதியான, பொறுப்பான குடும்பஸ்தனாக வாழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். ஓய்வு பெற்ற ஜெயிலரான ரஜினிகாந்தின் மகன் வசந்த் ரவி நேர்மையான காவல்துறை அதிகாரி. சிலை கடத்தல் கும்பல் நெட்வொர்க்கை பிடிக்க தீவிரம் காட்டும் வசந்த் ரவி, திடீரென்று மாயமாகி விட, அவர் கொல்லப்பட்டார் என்ற தகவலை காவல்துறையினர் ரஜினியிடம் சொல்கிறார்கள்.

 

மகனை கொன்றவர்களை ரஜினிகாந்த் பழிவாங்க கிளம்ப, அவரது குடும்பத்திற்கு வில்லனால் ஆபத்து ஏற்படுகிறது. தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமானால், ஒட்டு மொத்த நெட்வொர்க்கையும் அழிக்க ரஜினிகாந்த் முடிவு செய்ய, அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை குடும்ப பின்னணியோடு, மாசாக சொல்லியிருப்பது தான் ‘ஜெயிலர்’.

 

படத்தில் பல கதாபாத்திரங்கள், பல முன்னணி நட்சத்திரங்கள் இருந்தாலும், ரஜினிகாந்த் மட்டுமே திரை முழுவதும் வருகிறார். பூனையாக இருந்து புலியாக மாறி எதிரிகளை பந்தாடும் காட்சிகள் அனைத்தும் மாசாக இருக்கிறது. பேரனுடன் வீடியோ எடுப்பது, மகனைப் பற்றி தெரிந்து கலங்குவது, ஜெயிலராக மாஸ் காட்டுவது என ரசிகர்கள் கொண்டாடும் வகையில் நடித்திருக்கிறார்.

 

ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த்ரவி, மிர்ணா என முதல் பாதியில் வருபவர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

 

வில்லனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் விநாயக் மிரட்டலான நடிக்கை கொடுத்திருக்கிறார். 

 

அனிருத்தின் இசையில் ”காவாலா...”, ”ஹூகும்...” பாடல்களுக்கு தியேட்டர் தெறிக்கிறது. பின்னணி இசை மிரட்டல். மாஸ் காட்சிகள் அனைத்துக்கும் உயிர் கொடுக்கும் வகையில் அனிருத்தின் பீஜியம் அமைந்திருக்கிறது.

 

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், ஸ்டண்ட் சிவாவின் சண்டைக் காட்சிகளும் படத்தில் ரஜினிக்கான மாஸ் காட்சிகளுக்கு மேலும் பலம் கூட்டுகிறது.

 

முதல் பாதி முழுவதும் குடும்ப பின்னணி மற்றும் நகைச்சுவை காட்சிகளோடு நகர்ந்தாலும் வேகமாக பயணிக்கிறது. இரண்டாம் பாதியில் ரஜினியின் அதிரடி வேட்டை தொடங்குவதோடு, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் என உச்ச நடிகர்களும் அவ்வபோது தலைக்காட்டி ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்கள்.

 

முதல் பாதி எந்தவித தொய்வும் இல்லாமல் நகர்ந்தாலும், இரண்டாம் பாதி சற்று இழுவையாக இருக்கிறது. காவலா பாட்டில் தமன்னா போடும் ஆட்டமும், காட்டிய கவர்ச்சியும் ரசிகர்களை ஈர்த்தாலும், அவர் நடித்திருக்கும் காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. ஆனால், அந்த பலவீனத்தை ரஜினியின் மாஸ் காட்சிகள் மறைத்துவிடுகிறது.

 

மொத்தத்தில், ரஜினிகாந்தின் ரசிகர்களை மட்டும் இன்றி அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைக்கும் விதத்தில் இந்த ‘ஜெயிலர்’ இருக்கிறார்.

 

ரேட்டிங் 3.5/5