’ஜுராசிக் வோர்ல்ட் டோமினியன்’ விமர்சனம்
Casting : Chris Pratt, Bryce Dallas Howard, Laura Dern, Jeff Goldblum, Sam Neill, DeWanda Wise, Mamoudou Athie, BD Wong, Omar Sy
Directed By : Colin Trevorrow
Music By : Michael Giacchino
Produced By : Frank Marshall, Patrick Crowley
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘ஜுராசிக் பார்க்’. டையனோஸ்கர்கள் பற்றி அனைத்து மக்களும் தெரிந்துக்கொள்ளும் விதமாக உருவான இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டையனோஸ்கர்கள் பற்றிய திரைப்படங்கள் அடுத்தடுத்த பாகங்களாக வெளியானது. இதுவரை மொத்தம் ஐந்து பாகங்கள் வெளியாகியிருக்கும் ஜுராசிக் பார்க்கின் 6 வது பாகமாகவும், இறுதி பாகமாகவும் வெளியாகியிருக்கும் படம் தான் ‘ஜுராசிக் வேர்ல்ட் டோமினியன்’.
டெரெக் கான்லி மற்றும் காலின் ட்ரவோரோ கதை எழுதியிருக்கும் இப்படத்தின் திரைக்கதையை எமிலி கார்மைக்கேல் மற்றும் காலின் ட்ரவோரோ எழுதியுள்ளனர். காலின் ட்ரவோரோ இயக்கியிருக்கும் இப்படம் எப்படி என்று விமர்சனத்தை பார்ப்போம்.
டையனோசர் என்ற உயிரினம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த பூமியில் வாழ்ந்ததாகவும், அவைகள் மனிதர்களுக்கு முன்பே தோன்றிய உயிரினம் என்று பல தகவல்களை ஜுராசிக் பார்க் முதல் பாகம் நமக்கு தெரியப்படுத்தியது. அதன் பிறகு வந்த பாகங்கள் டையனோசர்களின் பல வகைகளை காட்டியதோடு, அவைகளை பிரம்மாண்டமாகவும் காண்பித்து வியக்க வைத்தன.
இந்த 6 வது பாகத்தின் கதை முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக டையனோசர்கள் வெவ்வேறு உருவ மாற்றத்தோடு நம்முடன் வாழ்ந்து வருவதாகவும் ஆனால் அவைகள் வாழ பாதுகாப்பான சூழல் இங்கு இல்லை என்று சொல்லும் கதையில், டையனோசர்களை வைத்து செய்யப்படும் டி.என்.ஏ ஆராய்ச்சி, அதம் மூலம் அவைகளை ஆயுதமாக மாற்றும் முயற்சி உள்ளிட்ட தகவல்களோடு எதிர்காலத்தில் இதுபோன்ற ஆராய்ச்சிகள் மூலம் மக்கள் இனத்திற்கே பேரழிவு ஏற்படும் என்ற எச்சரிக்கையை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.
ஜுராசிக் பார்க் என்றாலே சிறுவர்களுக்கான படம் என்ற அடையாளத்தை தாண்டி, அனைத்து தரப்பினருக்குமான படமாக இப்படம் இருப்பதோடு, உலகளாவிய பிரச்சனையான உணவு தட்டுப்பாடு அபாயத்தின் பின்னணி பற்றியும் பேசியிருக்கிறது.
பல வகையான டையனோசகர்களோடு, பிரமிக்க வைக்கும் மிகப்பெரிய டையனோசரின் தாக்குதலில் இருந்து கதாப்பாத்திரங்கள் தப்பிக்கும் காட்சிகள் அனைத்தும் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது.
சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்துவதற்காக பல விஷயங்கள் படத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும், சில இடங்களில் அவற்றை புரியாதவாறு சொல்லியிருப்பதும், அதிகமான கதாப்பாத்திரங்கள் மற்றும் அவர்களின் அதிகமான பேச்சுக்களால் பல இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது.
படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருந்தாலும், குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாரும் ஸ்கோர் செய்யவில்லை.
நட்சத்திரங்களை விட விஷுவல் எபெக்ட்ஸ், ஒளிப்பதிவு, இசை, பல வகையான டையனோசர்கள் மற்றும் அவைகளை வடிவமைத்த விதம் மற்றும் அதன் கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தான் அதிகம் கவனம் ஈர்க்கிறார்கள்.
மொத்தத்தில், ’ஜுராசிக் வோர்ல்ட் டோமினியன்’ வியக்க வைக்கவில்லை என்றாலும் ரசிக்க வைக்கிறது.
ரேட்டிங் 3/5