Jul 02, 2023 04:55 AM

’கபடி ப்ரோ’ திரைப்பட விமர்சனம்

7f57bc87c753fc023eed8167e1da1d3e.jpg

Casting : Sujan, Priya Lal, Sanjay Vellangi, Singam Puli, Madhusuthanan Rao, Meer Krishnan, Rajini.M, Manobala, Shanmugasundaram, Hana, Anjali, Sankar,

Directed By : Sathish Jayaraman

Music By : AJ Danial

Produced By : Anjhana Cinemas - JT Sathishkumar

 

தென்காசி பகுதியில் நிகழும்  கபடி விளையாட்டு  பின்னணியில் நிகழும் சம்பவங்கள் தான் ’கபடி புரோ’. அப்பகுதி  கபடி வீரன் வீரபாகு. தனது நண்பர்கள் உடன் பாயும் புலி என்ற பெயரில் கபடி அணி வைத்து இருக்கிறான். அதோடு அவ்வப்போது சின்ன சின்ன தில்லு முல்லுகளையும்  ஜாலியாக செய்து வருகிறான். அவனுக்கு ஆதரவாக அவனது நண்பர்கள் இருக்கின்றனர். 

 

இந்த நிலையில் கபடி வீரன் வீரபாகுவுக்கு  இன்ஸ்பெக்டர் இசக்கி முத்து மகள் அபிராமி (பிரியா லால்) உடன் காதல் மலர்கிறது. வீரபாகு தன் தாய்மாமன் மகளை திருமணம் செய்வான் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் அவன் நண்பன் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து காதலி அபிராமியை மணம் முடிக்க முற்படுகிறான். வீரபாகுவின் தில்லு முல்லுகள் காதலியின் தந்தை இன்ஸ்பெக்டர் இசக்கிபாண்டியனுக்கு தெரியவர அவனை பழிவாங்க துடிக்கிறார். 

அபிராமியும் அவனை உதறித் தள்ளுகிறாள். ஊரில் நடக்கும் கபடி போட்டியில் பழிவாங்க விரும்புகிறார். ஆனால் வீரபாகு அந்த போட்டியில் நேர்மையாக விளையாடி வெற்றி பெற முடிவு செய்கிறான். போட்டியில் வீரபாகு வெற்றி பெறுகிறானா? காதலர்கள் மீண்டும் சேர்கிறார் களா? என்பதுதான் கதை. 

 

வளர்ந்து வரும் இளம் நடிகரான சுஜன் நடிப்பில் மிளிர்கிறார். கபடி காட்சியில் யதார்த்தம் காட்டியிருக்கிறார். மற்றொரு கதாநாயகன் சஞ்சய் வெள்ளங்கி தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து செயல்பட்டுள்ளார்.

 

சிங்கம்புலியின் காமெடி  படத்துக்கு பலம் சேர்க்கிறது.மனோபாலா கல்யாண புரோக்கராக வந்து கலகலப்புட்டுகிறார்.இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன்  பாத்திரத்தில் வரும்  மதுசூதன ராவ்  படத்துக்கு பலம் சேர்க்கிறார். 

 

நாயகிகள் பிரியா லால், ரஜினி கிராமப் பெண்ணாக முத்திரை பதித்துள்ளார்கள். படத்தின் பாடல்கள் எல்லாமே அருமை .பாடலாசிரியர்கள் தாமரை,ஞானகரவேல் இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.நடனம் நோபல்,ராதிகா இருவருமே தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

 

இயக்குநர் சதீஷ் ஜெயராமன், இளைஞர்களுக்கான ஒரு படமாக இயக்கியிருக்கிறார். கபடி விளையாட்டையும், காதல் விளையாட்டையும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பவர், கூடவே காமெடியையும் கொஞ்சம் தூக்கலாக கொடுத்து சிரிக்க வைக்கிறார்.

 

ஒரு சில இடங்களில் சில குறைகள் இருந்தாலும், நகைச்சுவை காட்சிகள் அந்த குறையை மறைத்து படத்தை ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘கபடி ப்ரோ’ விறுவிறுப்பான விளையாட்டு.

 

ரேட்டிங் 3/5