’கடத்தல் காரன்’ விமர்சனம்

Casting : Kevin, Renu Soundar, Rukmani Babu
Directed By : S.Kumar
Music By : LV Ganesh
Produced By : F3 Films - Fraya, Feni, Felix
F3 பிலிம்ஸ் சார்பில் ஃபிரயா, ஃபெனி, ஃபெலிக்ஸ் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.குமார் இயக்கத்தில், அறிமுக நடிகர் கெவின், ரேணு செளந்தர் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கடத்தல் காரன்’.
ஹீரோ கெவினும், ஹீரோயின் ரேணு செளந்தரும் காதலிக்கிறார்கள். அவர்களின் காதலுக்கு ஹீரோயினின் தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதோடு, வேறு ஒருவருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்கிறார். திருமண நாளுக்கு முன்பு வீட்டில் இருந்து எஸ்கேப் ஆகும் ரேணு செளந்தர், ஹீரோ அனுப்பிய காரில் ஏறுவதற்கு பதிலாக திருடர்களின் காரில் ஏரிவிடுகிறார். தங்க நகைகளோடு மணப்பெண் இருந்ததால், அவரை தங்களது கிராமத்திற்கு திருடர்கள் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்.
திருடுவதை குலத்தொழிலாக கொண்ட அந்த கிரமாம் கட்டுப்பாடு நிறைந்தவையாக இருக்கும் கிராமத்தில் வெளி ஆட்கள் யாரும் நுழைய முடியாது. அப்படி நுழைந்தால் அவர்கள் திரும்பி செல்லவும் முடியாது. அப்படி கிராமத்தில் சிக்கிக்கொண்ட ஹீரோயினை காப்பாற்ற மாறுவேடத்தில் கிராமத்திற்குள் நுழையும் ஹீரோ, வந்த வேலையை பார்க்காமல், வேறு ஒரு வேலையில் தனது கவனத்தை செலுத்துகிறார். அது என்ன என்பதை பல திருப்பங்களோடும், சஸ்பென்ஸோடும் சொல்லியிருக்கிறார்கள்.
அறிமுக ஹீரோ கெவின், ஆக்ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தினாலும், நடிப்பில் இன்னும் முழுமை பெறவில்லை. இருந்தாலும், அவரது முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தாக வேண்டும். ஹீரோயின் ரேணு செளந்தர், தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
காமெடி ஏரியாவை தனது கண்ட்ரோலில் வைத்திருக்கும் ருக்மணி பாபு, தனது காமெடி மூலம் நம்மை சிரிக்க வைக்கிறார். அவருடன் அவ்வபோது கூட்டணி அமைக்கும் அந்த நான்கு இளைஞர்கள் சேர்ந்து செய்யும் குறும்பும், ரகளையும் ரசிக்க வைக்கிறது. வில்லாக நடித்தவர், கிராம தலைவர் என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் புதிய முகங்களாக இருந்தாலும், நடிப்பில் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
எஸ்.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், எல்.வி.கணேஷின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படத்தில் சஸ்பென்ஸ் என்ற எசன்ஸை சேர்த்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் எஸ்.குமார், குடும்பத்தோடு பார்க்க கூடிய விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார். சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைந்தாலும், சஸ்பென்ஸ் காட்சிகள் மூலம் சுவாரஸ்யத்தை கூட்டும் இயக்குநர், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.
ரேட்டிங் 3/5