Nov 18, 2022 06:19 PM

’கலகத் தலைவன்’ திரைப்பட விமர்சனம்

1792c5dc08aa090e69c7474191f64d51.jpg

Casting : Udhayanidhi, Nidhhi Agarwal, Aarav, Kalaiyarasan, Jeeva Ravi, Anupama Kumar

Directed By : Magizh Thirumeni

Music By : Srikanth Deva and Arrol Corelli

Produced By : Red Giant Movies

 

எமனாக மாறி மக்களை அழித்த கார்ப்பரேட் நிறுவனத்தை அடியோடு சாய்க்கும் பணியில் நாயகன் உதயநிதி ஈடுபடுகிறார். அதே கார்ப்பரேட் நிறுவனத்தை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக அதை அழிக்க நினைப்பவர்களையும், அவர்களின் திட்டத்தையும் அழிக்க களத்தில் இறங்குகிறார் வில்லன் ஆரவ். இந்த இருவரில் யார் வெற்றி பெற்றது? என்பதை சஸ்பென்ஸோடு சொல்வது தான் ‘கலகத் தலைவன்’.

 

காமெடி மற்றும் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி, தற்போது வித்தியாசமான கதைக்களங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கியுள்ளார். இதற்காகவே அவரை  பாராட்ட வேண்டும். கதை என்ன கேட்கிறதோ அதற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தும் உதயநிதி, பல இடங்களில் கண்களினாலேயே நடித்திருக்கிறார். ஹீரோ தானே பத்து பேரை பாய்ந்து அடிக்கலாம், என்று இல்லாமல் அனைத்தையும் லாஜிக்கோடு செய்திருப்பவர், என்னடா ஹீரோவாக இருந்துக்கொண்டு இப்படி ஓடுகிறாரே! என்று சில காட்சிகளில் யோசிக்க வைத்தாலும், இறுதியில் மேஜிக் நிகழ்த்தி தான் எப்பவுமே ஹீரோ தான், என்பதை நிரூபித்து கைதட்டல் பெறுகிறார்.

 

வழக்கமான கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் கதையுடன் பயணிக்கும் நாயகியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் நிதி அகர்வால், காதல் காட்சிகளில் வெளிப்படுத்தும் உணர்வினால் கூடுதல் அழகோடு ஜொலிக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் ஆரோவ், தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி பல இடங்களில் தன்னை நிரூபித்திருக்கிறார். அதிரடியாக அறிமுகமாகி வேகமாக பயணிக்கும் ஆரவ், வரும் அடுத்தடுத்த காட்சிகளும், அவரது கொடூரமான நடிப்பும் படம் பார்ப்பவர்களுக்கே அவர் மீது பயம் ஏற்பட வைக்கிறது.

 

’மெட்ராஸ்’ படத்திற்கு பிறகு ரசிகர்கள் மனதில் நிற்கும் குணச்சித்திர வேடத்தில் கலையரசன் நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் பரபரப்பின் உச்சமாக இருக்க, அதில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

 

ஜீவா ரவி, அங்கனா ராய், ஆர்ஜே விக்னேஷ், அனுபமா குமார் என மற்ற வேடத்தில் நடித்திருப்பவர்கள் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கே.தில்ராஜ், கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார். எந்த இடத்திலும் நாயகன், நாயகிக்கு தனியாக லைட்டிங் கொடுக்காமல், அவர்களையும் மற்ற கதாபாத்திரங்களுக்கான கலர்டோனில் காட்சிப்படுத்தியிருப்பது கதையோடு நம்மையும் பயணிக்க வைக்கிறது.

 

அரோல் கொரொலியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது. 

 

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. ‘ஈ’ படத்திற்கு பிறகு கவனிக்கும்படியான பின்னணி இசையமைத்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவா, தனி கவனம் பெருகிறார்.

 

சமூக அக்கறையோடு கதை எழுதி இயக்கியிருக்கும் மகிழ் திருமேனி, அதை மசாலத்தனம் அற்ற கமர்ஷியல் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். எந்த காட்சியாக இருந்தாலும் அது லாஜிக்கோடு தான் எடுக்கப்படுகிறது, என்பதை ரசிகர்களுக்கு புரிய வைப்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கும் இயக்குநர் அதற்காக சில கதாபாத்திரங்களை திரைக்கதையில் நுழைத்திருக்கிறார்.

 

வேகமாக நகரக்கூடிய திரைக்கதை என்றாலும், அதை காட்சிப்படுத்திய விதம் மிக மெதுவாக இருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் அதனால் பாதிப்படையும் மக்களை பற்றி பேசியிருக்கும் விஷயங்களால் அந்த குறை கண்ணுக்கு தெரியவில்லை.

 

மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை சாய்க்கும் முயற்சியில் ஈடுபடும் சாமானியர்களின் கதையை எந்தவித ஹீரோயிஷமும் இல்லாமல் இயல்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி, படம் முழுவதும் ஹீரோ பயந்து ஓடுவது போல் வைத்துவிட்டு, இறுதியில் புரூஸ்லியின் வாசகத்தோடு,  ஹீரோவின் மனவலிமையை ஒப்பிடும் காட்சியோடு படத்தை முடித்திருப்பது, எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது.

 

மொத்தத்தில், ’கலகத் தலைவன்’ மக்களுக்காக

 

ரேட்டிங் 3.5/5