’கொன்றுவிடவா’ விமர்சனம்
Casting : Hanifa, Ra.Ramamoorthy, Mahalakshmi, Jomole, KP Anil, Ashwathi, Ravindran
Directed By : KR Srijith
Music By : Bilal Keeys
Produced By : NP Ismail
கை கால் செயலிழந்த நிலையில் இருக்கும் இளம் பெண் ஒருவர் மூன்று ஆண்களை கொடூரமாக கொலை செய்கிறார். அவர் யார்?, எதற்காக அந்த மூவரை கொலை செய்கிறார்?, கை கால் செயலிழந்த நிலையில் இருக்கும் அந்த பெண் எப்படி கொலை செய்கிறார்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘கொன்றுவிட வா’.
ஒரு பெண்ணின் ஆத்மா பழிவாங்குவது என்ற வழக்கமான கதை தான் என்றாலும், அதற்கு வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான காட்சிகள் மூலம் படத்தை மற்ற திகில் படங்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.
படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மகாலெட்சுமி மற்றும் ஜோமோல் இருவரும் நிறைவாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள். மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ஹனீபா, ரா.ராமமூர்த்தி, கே.பி.அனில், ரவீந்திரன், அஸ்வதி என அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
திகில் படத்திற்கு ஏற்றவாறு காட்சிகளை கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் அபிஜித் கே.எம் தனது பணி மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். பாடல்கள் இல்லை என்றாலும் தனது பின்னணி இசை மூலம் பல இடங்களில் நம்மை பயப்பட வைக்கிறார் இசையமைப்பாளர் பிலால் கீஸ்.
ரா.ராமமூர்த்தியின் வசனம் சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது. கதை எழுதி இயக்கியிருக்கும் கே.ஆர்.ஸ்ரீஜித் தான் சொல்ல வந்த கதையை மிக சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
குறிப்பிட்ட சில லொக்கேஷன்கள், சில கதாப்பாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு முழுமையான திகில் படத்தை கொடுத்ததோடு, காட்சிகளை வேகமாக நகர்த்தி சென்றிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில், ‘கொன்றுவிட வா’ நன்று
ரேட்டிங் 3/5