Feb 10, 2022 02:04 PM

’கூர்மன்’ விமர்சனம்

d8569f3036d89b0701537919204bb96a.jpg

Casting : Rajaji, Janani IIyer, Bala Saravanan, Naren, Praveen, Muruganantham

Directed By : Bryan B. George

Music By : Tony Britto

Produced By : MK Entertainment - Mathanakumar

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒரு இடத்தில் இருக்கும் பழைய வீட்டில் முன்னாள் காவல்துறை அதிகாரியான நாயகன் ராஜாஜி வசிக்கிறார். அவருடன் வேலைக்காரர் பாலசரவணன், சுப்பு என்ற நாய் மற்றும் அவருடைய காதலியின் ஆத்மாவும் அந்த வீட்டில் இருக்கிறது. பிறர் நினைப்பதை கண்டுபிடிக்கும் சக்தி படைத்த ராஜாஜி, காவல்துறைக்கு சவாலாக இருக்கும் பல வழக்குகளை தன் வீட்டில் இருந்தபடியே தீர்த்து வைக்கிறார். இதனால் அவரை காவல்துறை உயர் அதிகாரியான நரேன் மீண்டும் பணிக்கு அழைத்தாலும், அதை நிராகரிப்பதோடு, தன் வீட்டில் இருந்து எந்த சூழலிலும் வெளியேற மாட்டேன், என்று பிடிவாதம் பிடிக்கும் ராஜாஜி, ஒரு குற்றவாளியால் தன் வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் ராஜாஜி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் அசால்டாக நடித்து அப்ளாஷ் பெறுவதோடு, எப்படிப்பட்ட கதாப்பாத்திரமாக இருந்தாலும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்றும்  நிரூபித்திருக்கிறார்.

 

ராஜாஜியின் உதவியாளராக நடித்திருக்கும் பாலசரவணன், காதலியாக நடித்திருக்கும் ஜனனி ஐயர், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் நரேன் என அனைத்து நடிகர்களும் தங்களது வேலை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

சக்தி அரவிந்தின் ஒளிப்பதிவும், டோனி பிரிட்டோவின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, சாதாரண காட்சிகளை கூட கவனிக்க வைக்கும் காட்சிகளாக நகர்த்தி செல்கிறது.

 

கதைக்களம் மற்றும் கதாப்பாத்திரங்களின் அறிமுகம் மூலம் படத்தின் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குநர் பிரயன் பி.ஜார்ஜ், அடுத்தடுத்த காட்சிகள் மூலம் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து விடுகிறார்.

 

பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், என்ற கருத்தை வலியுறுத்தியிருப்பது பாராட்டத்தக்கதாக இருந்தாலும், நாயகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சொல்லியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

ரேட்டிங் 2/5